இணையில்லாத ஓர் மன்னன் மகள் நீ
துணையில்லாத ஓர் ஏழை மகன் நான்
உயர் விண்மீன் நீ இருள் மின்மினி நான்
நினைப்பதெல்லாம் அன்பொன்றுதானே..
மனக்கோட்டை தீர்ந்ததனால்
மறப்பாயா பேரன்பையே..ஹோய்....
மறப்பாயா பேரன்பையே
மறக்கும் நிலைதான் வருமோ
நிலைக் கொண்ட நின் பேரன்பையே ஹோய்..
நிலைக் கொண்ட நின் பேரன்பையே...
புவியாள் மன்னரின் பெண் மீதுள்ள பிரேமை
தவறென்று பகர்ந்தாரே பாரில்
புவியாள் மன்னரின் பெண் மீதுள்ள பிரேமை
தவறென்று பகர்ந்தாரே பாரில்
மையல் கொண்ட மாது மனத் துன்பம் தணிய
மறக்காது பாடும் தன் பேரை...
மறக்கும் நிலைதான் வருமோ
நிலைக் கொண்ட நின் பேரன்பையே ஹோய்..
நிலைக் கொண்ட நின் பேரன்பையே...