பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்
இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்யநாதன்
ஆண் : கலையாத கல்வியும் குறையாத
வயதும்
ஓர் கபடு வாராத நட்பும்
ஆண் : கலையாத கல்வியும் குறையாத
வயதும்
ஓர் கபடு வாராத நட்பும்
கன்றாத வளமையும் குன்றாத இளமையும்
கழுபிணியிலாத உடலும்
கழுபிணியிலாத உடலும்
ஆண் : சலியாத மனமும் அன்பு அகலாத
மனைவியும்
தவறாத சந்தானமும்
சலியாத மனமும் அன்பு அகலாத
மனைவியும்
தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கொடையும் ம்ம் ம்ம் ஆ ஆ ஆ ஆ
ஆஅ ஆஅ ஆஅ…….
ஆண் : தொலையாத நிதியமும் கோணாத
கோலும்
ஒரு துன்பமில்லாத வாழ்வும்
துய்ய நின் பாதத்தில் அன்பும்….ம்ம்…..உதவி
பெரிய தொண்டரொடு கூட்டு கண்டாய்….அ அ அ….
ஆண் : அலையாழி அறிதுயிலும் மாயனது
தங்கையே
ஆதிக்கட வூரின் வாழ்வே
அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே
ஆதிக்கட வூரின் வாழ்வே
ஆண் : அமுதீசர் ஒருபாகம் அகலாத
சுகபாணி
அருள்பாமி அபிராமியே….எ ஏ ஏ….
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி
அருள்பாமி அபிராமியே
ஆண் : தனம் தரும் கல்வி தரும்
ஒரு நாளும் தளர்வறியா மனம் தரும்
தெய்வ வடிவும் தரும்
நெஞ்சில் பஞ்சம் இல்லா இனம் தரும்
நல்லன எல்லாம் தரும்
அன்பர் என்பவர்க்கே கனம் தரும்
பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே….
பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே….