பாடகி : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : கங்கை அமரன்
பெண் : கலையும் மேகங்களே…..
காதல் ஆசைகளே…..
பெண் : கலையும் மேகங்களே
காதல் ஆசைகளே
இளமை என்னை சுடும்
ஏக்கம் கண்ணீர் விடும்
பாலையில் ஏதடி
கண்ணனின் பிருந்தாவனம்
பாலையில் ஏதடி
கண்ணனின் பிருந்தாவனம்
பெண் : கலையும் மேகங்களே
காதல் ஆசைகளே……
பெண் : உன்னை நான் பார்த்தேன்
என்னை நீ பார்த்தாய்
நான் பார்த்ததும் நீ பார்த்ததும்
வெவ்வேறு கோணம்
பெண் : நிழலை நான் பார்த்தேன்
அதுதான் ஏமாந்தேன்
உன் மீதிலே என் நெஞ்சிலே
எனக்கென்ன கோபம்
பொய் மானைத் தேடினேன்
மெய் சோர்ந்து போகிறேன்
பெண் : கலையும் மேகங்களே
காதல் ஆசைகளே……
இளமை என்னை சுடும்
ஏக்கம் கண்ணீர் விடும்
பாலையில் ஏதடி
கண்ணனின் பிருந்தாவனம்
ஆண் : ……………………………..
பெண் : பாலும் கள்ளென்று
எண்ணும் நினைவொன்று
என் நெஞ்சிலே நான் கொண்டது
தவறென்று கண்டேன்
பெண் : கானல் தண்ணீரும்
கங்கை தண்ணீரும்
ஒன்றல்லவே என்றெண்ணவும்
அறியாது நின்றேன்
எல்லோரும் கண்ணனா
நீ கொஞ்சம் வேறுதான்
பெண் : கலையும் மேகங்களே
காதல் ஆசைகளே……
இளமை என்னை சுடும்
ஏக்கம் கண்ணீர் விடும்
பாலையில் ஏதடி
கண்ணனின் பிருந்தாவனம்
பாலையில் ஏதடி
கண்ணனின் பிருந்தாவனம்
பெண் : கலையும் மேகங்களே
காதல் ஆசைகளே……