பாடகி : ஆர். பாலசரஸ்வதி தேவி
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
பெண் : கலையாத ஆசைக் கனவே எந்தன்
கருத்தை விட்டு அகலா நினைவே
பெண் : கலையாத ஆசைக் கனவே எந்தன்
கருத்தை விட்டு அகலா நினைவே
பெண் : அலை மோதி எனது அறிவே
நிலை தடுமாற செய்த திருவே….
அலை மோதி எனது அறிவே
நிலை தடுமாற செய்த திருவே…..
பெண் : நிலையான இன்ப உலகாள எந்தன்
மனம் நாடும் அன்பின் உருவே…..
நிலையான இன்ப உலகாள எந்தன்
மனம் நாடும் அன்பின் உருவே…..
பெண் : கலையாத ஆசைக் கனவே எந்தன்
கருத்தை விட்டு அகலா நினைவே
பெண் : மறவாது நெஞ்சம் ஒரு போதும் உமையே
மணம் வீசும் காதல் மலரே
மறவாது நெஞ்சம் ஒரு போதும் உமையே
மணம் வீசும் காதல் மலரே
பெண் : வளையாத வீரம் விளையாடும் உயிரே
வளையாத வீரம் விளையாடும் உயிரே
வலை வீசும் பாசக் கயிறே நேச
வலை வீசும் பாசக் கயிறே…..
பெண் : கலையாத ஆசைக் கனவே எந்தன்
கருத்தை விட்டு அகலா நினைவே
பெண் : கலையாத ஆசைக் கனவே எந்தன்
கருத்தை விட்டு அகலா நினைவே