பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் ஏ. பி. கோமளா
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
பெண் : இதயம் தன்னையே
எனது இதயம் நாடுதே
உனது இதயம் தன்னையே
எனது இதயம் நாடுதே
புதிய உணர்வலைகள் பொங்கி
இசை பாடுதே
புதிய உணர்வலைகள் பொங்கி
இசை பாடுதே
ஆண் : இதயம் தன்னையே
எனது இதயம் நாடுதே
உனது இதயம் தன்னையே
எனது இதயம் நாடுதே
புதிய உணர்வலைகள் பொங்கி
இசை பாடுதே
புதிய உணர்வலைகள் பொங்கி
இசை பாடுதே
ஓ…..ஓஒ…..ஓ….ஓஒ…
பெண் : உதயம் கண்டு
அல்லி மலர்வதுபோல்
மதியின் உதயம் கண்டு
அல்லி மலர்வதுபோல்
உம்மைக் கண்டு என் உள்ளம் மலருதே
உதயம் கண்டு
அல்லி மலர்வதுபோல்
உம்மைக் கண்டு என் உள்ளம் மலருதே
ஆண் : மதுவைப் பருகியே மகிழும்
சோலை வண்டுபோல்
வனிதை உனதழகை பருகி
மனம் மகிழுதே
ஆண் : மதுவைப் பருகியே மகிழும்
சோலை வண்டுபோல்
வனிதை உனதழகை பருகி
மனம் மகிழுதே
பெண் : இதயம் தன்னையே
எனது இதயம் நாடுதே
புதிய உணர்வலைகள் பொங்கி
இசை பாடுதே
ஓ…..ஓஒ…..ஓ….ஓஒ…
ஆண் : நதிகள் கடலையே
நாடி சேர்வது போல்
நதிகள் கடலையே
நாடி சேர்வது போல்
நமது நெஞ்சம் அன்பு என்னும்
கடலில் ஒன்று சேருதே
ஆண் : நமது நெஞ்சம் அன்பு என்னும்
கடலில் ஒன்று சேருதே
பெண் : புதுமைக் கனவிலே
புவியை மறந்த நிலையிலே
புதுமைக் கனவிலே
புவியை மறந்த நிலையிலே
இதுபோல் எந்த நாளும்
இனிமை காண விரும்புதே
இதுபோல் எந்த நாளும்
இனிமை காண விரும்புதே
இருவர் : இதயம் தன்னையே
எனது இதயம் நாடுதே
புதிய உணர்வலைகள் பொங்கி
இசை பாடுதே
இதயம் தன்னையே
எனது இதயம் நாடுதே
புதிய உணர்வலைகள் பொங்கி
இசை பாடுதே