காதல் காதல் காதல்
காதல் காதல் இனித்திடும் நரகமா
காதல் காதல் வலித்திடும் சொர்க்கமா
கண்களில் பொங்கும் நீரில்
காட்சியும் மறைந்து போகும்
காதலின் மடியில் தானே
இறுதியாய் இதயம் தூங்கும்
பூவை காட்டி முள்ளை விற்றாய் காதலே
தெய்வம் கருணை கொண்டால்
வெல்லும் காதலே
காதல் காதல் காதல்.......(காதல்)
ஓடும் மேகங்கள் ஓய்வு கொள்ளலாம்
மழையாய் பொழிந்தே தன் பாரம் தீர்க்கலாம்
அழுதால் கூட தீரா சுமையே
காதல் தீயில் கருகும் இமையே...(காதல்)
கண்கள் விளையாடி காதல் வந்தது
இதயம் களவாட துணிவு தந்தது
இதயம் தந்து இதயம் வாங்கும்
காதல் என்றும் வெல்லும் வெல்லுமே....