பாடகர் : யுவன் ஷங்கர் ராஜா
இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்
ஆண் : ஆடாத கால்களும் ஆடுமய்யா
எங்க காதோரம் கடல் புறா பாடுமய்யா
வங்காள கரையோரம் வாரும்மய்யா
எங்க பாய்மர விளையாட்ட பாருமய்யா..
ஆண் : கொம்பன் சுறா வேட்டையாடும்
கடல் ராசா நான்
கடல் ராசா நான்
ரத்தம் சிந்தி முத்து குளித்திடும்
கடல் ராசா நான்…….மரியான் நான்
ஆண் : நெத்திலி கொழம்பு வாடை……
ஹே ஹே ஹே…..
எங்க நீரோடி காத்துல
வீசும் அய்யா
ஏ ஒத்தை மர கல்லும் உப்பு கருவாடும்
சித்தம் குளிர்ந்திடும் வாடை அய்யா
ஆண் : ஏக்கம் கொண்ட
ஆவி அழுதிட
கோபம் கொண்ட வித்தையை
காட்டும் கோமாளி நான்
ஆண் : ஏக்கம் கொண்ட
ஆவி அழுதிட
கோபம் கொண்ட வித்தையை
காட்டும் கோமாளி நான்
ஆண் : கொம்பன் சுறா வேட்டையாடும்
கடல் ராசா நான்
கடல் ராசா நான்
ரத்தம் சிந்தி முத்து குளித்திடும்
கடல் ராசா நான்…….மரியான் நான்
ஆண் : நான் ஒத்தையில் பாடுறேனே தன்னால
இந்த பாலைவன பாறைகளின்
முன்னால…….முன்னால…..
நான் ஒத்தையில் பாடுறேனே தன்னால
இந்த பாலைவன பாறைகளின் முன்னால
வெறும் புத்திகெட்ட பாவிகளின் நடுவே
பொலம்பும் என் உயிரே உயிரே……
ஆண் : நான் ஊருவிட்டு ஊரு வந்தேன்
தனியாக
இப்ப ஊனமாக சுத்துறேனே அடியே
என் கூட்டம் வரும் உள்ள சேரும் நெனப்புல
தவிச்சேன் பனிமலரே
பனிமலரே பனிமலரே
ஆண் : கொம்பன் சுறா வேட்டையாடும்
கடல் ராசா நான்
கடல் ராசா நான்
கொம்பன் சுறா வேட்டையாடும்
கடல் ராசா நான்
கடல் ராசா நான்