பாடகர் : விஜய் யேசுதாஸ்
இசை அமைப்பாளர் : பிரேம்ஜி அமரன்
ஆண் : காதலே நீ என்னோடு
கோபம் கொள்ளாதே
காலம் எல்லாம்
உன்னை நான் தேட செய்யாதே
ஆண் : நான் ஒரு சேவகன்
காதலின் காதலன்
யாரிடம் நான் உன்னை
தேடுவேன் காதலே
ஆண் : காதலே நீ என்னோடு
கோபம் கொள்ளாதே
காலம் எல்லாம்
உன்னை நான் தேட செய்யாதே
ஆண் : தூங்கும் போதும் யோசிப்பேன்
தூங்காது உனை நான் நேசிப்பேன்
உண்ணும் போது உன்னையே
உண்ணவே நான் யாசிப்பேன்
ஆண் : போகும் இடமெல்லாம்
உந்தன் கைகளை பிடித்தபடியே
நான் நடக்கிறேன்
என்ன கோபமோ கண்ணை கட்டி நீ
உன்னை தேடவே சொல்கிறாய்
ஆண் : காதலே நான் ஒரு
காதலின் தூதுவன்
நீ எனை காதலி
காதலே வாழுவாய்
ஆண் : காதலே நீ என்னோடு
கோபம் கொள்ளாதே
காலம் எல்லாம்
உன்னை நான் தேட செய்யாதே
ஆண் : காதலே உன் வாசலில்
மொழிகள் யாவும் மௌனமே
பேசுகின்ற வார்த்தையோ
நாணத்தாலே விலகுமே
ஆண் : யாருமில்லை என்ற போதிலும்
வரம்பு மீறியதில்லையே
காதலாகினோம் கசிந்து உருகினோம்
கரங்கள் தீண்டியதில்லையே
ஆண் : ஆயிரம் காலமாய்
வாழ்கிறாய் காதலே
யாருமே என்னை போலே
காதலன் இல்லையே
ஆண் : காதலே நீ என்னோடு
கோபம் கொள்ளாதே
காலம் எல்லாம்
உன்னை நான் தேட செய்யாதே
ஆண் : நான் ஒரு சேவகன்
காதலின் காதலன்
யாரிடம் நான் உன்னை
தேடுவேன் காதலே
ஆண் : காதலே நீ என்னோடு
கோபம் கொள்ளாதே
காலம் எல்லாம்
உன்னை நான் தேட செய்யாதே