பாடகர் : ஆர். பி. ஷ்ரவன்
இசை அமைப்பாளர் : அணில் ஸ்ரீனிவாசன்
ஆண் : இந்த இரவு தீர்வதற்குள்ளே…
ஆண் : இந்த இரவு தீர்வதற்குள்ளே…(2)
ஒருகோடி மொட்டுக்கள்
உடைந்திருக்கும்
ஒன்றிரண்டு விண்மீன்கள்
உதிர்ந்திருக்கும்
ஆண் : எத்தனையோ கருப்பையில்
உயிர்த்திரவம் விழுந்திருக்கும்
எத்தனையோ படுக்கைகளில்
நோய்த்துன்பம் முடிந்திருக்கும்
ஆண் : உன்னைநான் முத்தமிடத்…(2)
தடையுண்டோ பைங்கிளி?…(2)
உனக்கும் எனக்கும் ஏன்
சமூக இடைவெளி?
ஆண் : இந்த இரவு தீர்வதற்குள்ளே…
ஆண் : இந்த இரவு தீர்வதற்குள்ளே…
ஆண் : மென்காற்று கண்டங்கள்
கடந்திருக்கும்
வெண்ணிலவு ஒருகீற்று
வளர்ந்திருக்கும்
ஆண் : கண்ணாடிக் கோப்பைகளும்
கன்னிமையும் உடைந்திருக்கும்
முன்னிரவில் பலர்செய்த
பாவங்கள் மறந்திருக்கும்
ஆண் : உயிர் ரெண்டும் இடம்மாறத்
தழுவாயோ பைங்கிளி?
உயிர் ரெண்டும் இடம்மாறத்
தழுவாயோ பைங்கிளி?
உனக்கும் எனக்கும் ஏன்
சமூக இடைவெளி?
ஆண் : இந்த இரவு தீர்வதற்குள்ளே…
ஆண் : இந்த இரவு தீர்வதற்குள்ளே…
ஆண் : அழகான கவிதைவரி
விழுந்திருக்கும்
அரசாங்கச் சதியொன்று
முடிந்திருக்கும்
ஆண் : சிறைவாசக் கைதிக்கு
நாளொன்று குறைந்திருக்கும்
சேயொன்று கருப்பையில்
சிலபொழுது புரண்டிருக்கும்
ஆண் : உறவேதும் நேராமல்
பிரிவாயோ பைங்கிளி?
உறவேதும் நேராமல்
பிரிவாயோ பைங்கிளி?
உனக்கும் எனக்கும் ஏன்
சமூக இடைவெளி?
ஆண் : இந்த இரவு தீர்வதற்குள்ளே…(2)
ஒருகோடி மொட்டுக்கள்
உடைந்திருக்கும்
ஒன்றிரண்டு விண்மீன்கள்
உதிர்ந்திருக்கும்
ஆண் : எத்தனையோ கருப்பையில்
உயிர்த்திரவம் விழுந்திருக்கும்
எத்தனையோ படுக்கைகளில்
நோய்த்துன்பம் முடிந்திருக்கும்
ஆண் : உன்னைநான் முத்தமிடத்…(2)
தடையுண்டோ பைங்கிளி?…(2)
உனக்கும் எனக்கும் ஏன்
சமூக இடைவெளி?