பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் தீபன் சக்கரவர்த்தி
இசையமைப்பாளர் : இளையராஜா மற்றும் கங்கை அமரன்
ஆண் : ஹலோ ஆசை தீபமே….
கண்ணே காதல் வேதமே…..
ஹலோ ஆசை தீபமே….
கண்ணே காதல் வேதமே….
பெண் : இதயம் சேரும் நேரமே
உதயம் வந்து சேருமே
ஆண் : உன் கண்ணோடு என் தேகமே….ஏ…..
பெண் : ஆசை தீபமே….
கண்ணே காதல் வேதமே….
ஆண் : ராவும் பகலும்
பேசும் மொழிகள் நாதஸ்ரவமே
பெண் : பாவை உயிரும்
வாழ்வும் நினைவும் நாதன் வரமே
ஆண் : வாடை வருகுது குளிர் வதைத்திடுதே
பெண் : கூடி இருந்திட மனம் தவித்திடுதே
ஆண் : காதலின் பாதையில் இன்பலோகமே…
பெண் : ஹலோ ஆசை தீபமே….
கண்ணே காதல் வேதமே…..
ஆண் : இதயம் சேரும் நேரமே
உதயம் வந்து சேருமே
பெண் : உன் கண்ணோடு என் தேகமே….ஏ…..
ஆண் : ஆசை தீபமே….
கண்ணே காதல் வேதமே….
பெண் : நாளும் நினைத்தேன்
ஆவியெனதான் தேவன் உனையே
ஆண் : பாச மழையில் பாடும்
குயிலே நீயும் இசையே
பெண் : காதல் தலைவன் வரம் கிடைத்ததுவே
ஆண் : பாவை வரவில் விழி குளிர்ந்ததுவே
பெண் : கூடவும் நாடவும் தாகம் தீருமே….
ஆண் : ஹலோ ஆசை தீபமே….
கண்ணே காதல் வேதமே…..
ஹலோ ஆசை தீபமே….
கண்ணே காதல் வேதமே….
பெண் : இதயம் சேரும் நேரமே
உதயம் வந்து சேருமே
ஆண் : உன் கண்ணோடு என் தேகமே….ஏ…..
பெண் : ஆசை தீபமே….
கண்ணே காதல் வேதமே….
இருவர் : லல்லா லால லால லா
லல்லா லால லால லா