பாடகி : வனிதா
இசை அமைப்பாளர் : சந்திரபோஸ்
பெண் : எழுந்தாள் மெல்ல எழுந்தாள்
சேலை சிறகால் விண்ணில் பறந்தாள்
எழுந்தாள் மெல்ல எழுந்தாள்
சேலை சிறகால் விண்ணில் பறந்தாள்
பெண் : என்ன நடந்தது பெண்ணுக்குள்ளே
தென்றல் அடிக்குது கண்ணுக்குள்ளே
காதல் பாவை இந்த அதிகாலை நேரத்தில்
பனி சிந்தும் ஈரத்தில்….
பெண் : எழுந்தாள் மெல்ல எழுந்தாள்
சேலை சிறகால் விண்ணில் பறந்தாள்
பெண் : ஏனிந்த மயக்கம் இன்று எவரை கேட்பதோ
தேன் எங்கு இனிக்கும் என்று எறும்பை கேட்பதோ
மெல்ல மெல்ல மேனியில் மின்னல் வந்து போகுதோ
உள்ளே என்ன ஓசையோ ஓடை ஒன்று ஓடுதோ
இடுப்பில் சரியும் சேலைப் போல் இதயம் நழுவுதோ
பெண் : எழுந்தாள் மெல்ல எழுந்தாள்
சேலை சிறகால் விண்ணில் பறந்தாள்
பெண் : நான் இன்று விழித்துக் கொண்டே கனவு காண்கிறேன்
ஓஓஓ..அந்த பனித் துளிக்குள் உலகம் பார்க்கிறேன்
காதல் வந்த பின்புதான் ஞானம் கொஞ்சம் வந்தது
மௌனம் என்னும் வார்த்தைக்கு ஏதோ அர்த்தம் உள்ளது
வானுக்கும் மண்ணுக்கும் ஊஞ்சல் கட்ட வசதி வந்தது
பெண் : எழுந்தாள் மெல்ல எழுந்தாள்
சேலை சிறகால் விண்ணில் பறந்தாள்
எழுந்தாள் மெல்ல எழுந்தாள்
சேலை சிறகால் விண்ணில் பறந்தாள்
பெண் : என்ன நடந்தது பெண்ணுக்குள்ளே
தென்றல் அடிக்குது கண்ணுக்குள்ளே
காதல் பாவை இந்த அதிகாலை நேரத்தில்
பனி சிந்தும் ஈரத்தில்….
பெண் : எழுந்தாள் மெல்ல எழுந்தாள்
சேலை சிறகால் விண்ணில் பறந்தாள்
ம்ம்ம்ம்ம்ம்…..ம்ம்ம்ம்ம்ம்…..