பாடகி : எஸ். பி. ஷைலஜா
இசை அமைப்பாளர் : சந்திரபோஸ்
பெண் : தாயம் போடு ஒரு தாயம்
காயும் கட்டத்திலே பாயும்
தாயம் போடு ஒரு தாயம்
காயும் கட்டத்திலே பாயும்
பெண் : ஒரு தாயம் அது இரு தாயம்
என தொடரும் பொழுதொரு ஆதாயம்
தாயம் போடு ஒரு தாயம்
காயும் கட்டத்திலே பாயும்
பெண் : ஆலவட்டம் போடும் காலக் கட்டம் தாண்டும்
ஆனாலும் தொடரும்
ஆலவட்டம் போடும் காலக் கட்டம் தாண்டும்
ஆனாலும் தொடரும்
பெண் : ஆணினங்கள் தீண்டும் பூவினங்கள் மீண்டும்
நாள்தோறும் மலரும்
தழுவும் கலையில் விலகாது முல்லை
மேடைக் கட்டித் தாளம் தட்டத் தயங்காது
தாயம் போடு ஒரு தாயம் காயும் கட்டத்திலே பாயும்
பெண் : முத்து மணி வைரம் மோதிரத்து பவளம்
அணைத்தால் அணைக்காது
முத்து மணி வைரம் மோதிரத்து பவளம்
அணைத்தால் அணைக்காது
பெண் : ரத்தினங்கள் யாவும் மெத்தை சுகம் காணும்
வழியை வழங்காது
எடுத்தும் கொடுத்தும் பரிமாறும் சுகம்
அத்தனைக்கும் மொத்த இடம் பெண்ணாகும்
பெண் : தாயம் போடு ஒரு தாயம்
காயும் கட்டத்திலே பாயும்
தாயம் போடு ஒரு தாயம்
காயும் கட்டத்திலே பாயும்
பெண் : ஒரு தாயம் அது இரு தாயம்
என தொடரும் பொழுதொரு ஆதாயம்
ஆஆஹாஹ் ஆஆஹாஹ்….ஹாஹாஹ்…..