பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் ஜோதி கண்ணா
இசை அமைப்பாளர் : டி. ஆர். ராஜு
பெண் : ஏழு மலை வாசா எமையாளும் ஸ்ரீனிவாசா
ஏழு மலை வாசா எமையாளும் ஸ்ரீனிவாசா
எந்நாளும் துணை நீயே ஸ்ரீவேங்கடேசா
ஏழு மலை வாசா எமையாளும் ஸ்ரீனிவாசா
பெண் : தாயில்லாத பிள்ளை இது வாயில்லாத கிள்ளை
பெண் : தாயில்லாத பிள்ளை இது வாயில்லாத கிள்ளை
சிறகில்லாத பறவை இது தேடுதய்யா உறவை
பெண் : அழைக்கும் முன்னே வருவாய்
நீ கேட்டதெல்லாம் தருவாய்
அழைக்கும் முன்னே வருவாய்
நீ கேட்டதெல்லாம் தருவாய்
குழந்தை மனம் அறிவாய்
குறை தீர அருள் புரிவாய்
பெண் : ஏழு மலை வாசா எமையாளும் ஸ்ரீனிவாசா
எந்நாளும் துணை நீயே ஸ்ரீவேங்கடேசா
ஏழு மலை வாசா எமையாளும் ஸ்ரீனிவாசா
பெண் : அன்பு உலகை ஆளும்
அது நல்ல நினைவில் வாழும்
அன்பு உலகை ஆளும்
அது நல்ல நினைவில் வாழும்
கோபம் கொண்ட இதயம்
ஒரு மிருகமாக மாறும்
பெண் : மலையில் வாழும் தெய்வம்
தந்தை மனதில் வாழ வேண்டும்
பெண் : மலையில் வாழும் தெய்வம்
ஆஆ ஆ ஆஆ ஆஆ
இருவர் : மலையில் வாழும் தெய்வம்
தந்தை மனதில் வாழ வேண்டும்
பிரிந்து வாழும் நெஞ்சம்
ஒன்று சேர்ந்து வாழ வேண்டும்
பெண் : ஏழு மலை வாசா எமையாளும் ஸ்ரீனிவாசா
எந்நாளும் துணை நீயே ஸ்ரீவேங்கடேசா
ஏழு மலை வாசா எமையாளும் ஸ்ரீனிவாசா