பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
ஆண் : என்ன கொடுப்பாய்
என்ன கொடுப்பாய்
பெண் : அன்பைக் கொடுப்பேன்
நான் அன்பைக் கொடுப்பேன்
ஆண் : ஓஹோய்…..
பெண் : ம்ஹும்….
ஆண் : என்ன கொடுப்பாய்
என்ன கொடுப்பாய்
பெண் : அன்பைக் கொடுப்பேன்
நான் அன்பைக் கொடுப்பேன்
ஆண் : மின்னலது பின்னி விழும்
உன்னழகு கண் மலரில்
என் மனது…..இன்பமுற…..
என் மனது இன்பமுற என்ன கொடுப்பாய்
பெண் : தென்னவர்கள் காவியத்தில்
தேடுகின்ற காதலினை
என்னழகுப் பூ விழியால்
பின்னிக் கொடுப்பேன்
ஆண் : ம்ம்ம்.. என்ன கொடுப்பாய்
என்ன கொடுப்பாய்
பெண் : அன்பைக் கொடுப்பேன்
நான் அன்பைக் கொடுப்பேன்
ஆண் : தேனுரிமை கொண்டாடும்
செவ்வரளிப் பூவிதழை
நான் உரிமை…..கொள்ள வந்தால் …
நான் உரிமை கொள்ள வந்தால்
என்ன கொடுப்பாய்
பெண் : சேர்த்தவைகள் அத்தனையும்
கேட்டதனால் நான் எடுத்து
சிந்தாமல் சிதறாமல் அள்ளிக் கொடுப்பேன்
ஆண் : ஆஹா….என்ன கொடுப்பாய்
என்ன கொடுப்பாய்
பெண் : அன்பைக் கொடுப்பேன்
நான் அன்பைக் கொடுப்பேன்
ஆண் : காவலில்லா மாளிகைக்கு
காவலுக்கு வந்தவனே
கன்னமிட…..வந்து நின்றால்….
கன்னமிட வந்து நின்றால்
என்ன கொடுப்பாய்
பெண் : தேவை எனும் காரணத்தால்
திருடனையும் நான் மதித்து
திரும்பவும் கன்னமிட என்னைக் கொடுப்பேன்
ஆண் : ஹோய்….என்ன கொடுப்பாய்
என்ன கொடுப்பாய்
பெண் : அன்பைக் கொடுப்பேன்
நான் அன்பைக் கொடுப்பேன்
ஆண் : ஓஹோய்….
பெண் : ம்ஹும்….
ஆண் : என்ன கொடுப்பாய்
என்ன கொடுப்பாய்
பெண் : அன்பைக் கொடுப்பேன்
நான் அன்பைக் கொடுப்பேன்