பாடகர்கள் : ஏ. எல். ராகவன் மற்றும் ஏ. ஜி. ரத்னமாலா
இசையமைப்பாளர் : எஸ். வி. வெங்கட்ராமன்
பெண் : நீங்க எப்படியோ போங்க
வேகத்தையும் அடக்கிக்கிட்டு விஷயத்துக்கு வாங்க
விளக்கமாக பதிலைத் தாரேன் கேட்டுக்கிட்டு போங்க
ஆண் : காதலென்றால் என்ன
கொஞ்சம் புரியும் படி சொல்லு
கொஞ்சம் புரியும் படி சொல்லு
பெண் : ஹையே…
ஆண் : ஹா……ஹா….அஹா….
ஆண் : காதலென்றால் என்ன
கொஞ்சம் புரியும் படி சொல்லு
கொஞ்சம் புரியும் படி சொல்லு
பெண் : ஹையே…
ஆண் : ஹா……ஹா….அஹா….
காதலென்றால் என்ன
கொஞ்சம் புரியும் படி சொல்லு
கொஞ்சம் புரியும் படி சொல்லு
பெண் : அது கண்களாலே ஆணும் பெண்ணும்
பேசிக் கொள்ளும் சொல்லு
அது கண்களாலே ஆணும் பெண்ணும்
பேசிக் கொள்ளும் சொல்லு
ஆண் : ஆ…..ஆ….ஹோ….ஓஓஓ…ஓஹோ
கல்யாணம் என்னவென்று விளக்கு
பெண் : பெண் கழுத்தில் முடி போடும் ஒரு சடங்கு
ஆண் : கல்யாணம் என்னவென்று விளக்கு
பெண் : பெண் கழுத்தில் முடி போடும் ஒரு சடங்கு
ஆண் : ஓஹோ… அப்படியா… ஆ… இன்னொண்ணு
ஆண் : தைரியத்துக்கொரு சந்தேகம் கேளு கண்மணி
அது தீரும் படி பதிலை எனக்கு சொல்லு அம்மணி
ஆண் : காதல் செய்த பின்னே கல்யாணம் செய்வதா
இல்லே கல்யாணம் செய்த பின்னே காதல் செய்வதா
காதல் செய்த பின்னே கல்யாணம் செய்வதா
இல்லே கல்யாணம் செய்த பின்னே காதல் செய்வதா
பெண் : எக்கச்சக்கமான கேள்வி கேட்டுப் போட்டீங்க
இப்ப ரெண்டு தினுசும் இந்த நாளில் நடப்பது தாங்க
எக்கச்சக்கமான கேள்வி கேட்டுப் போட்டீங்க
இப்ப ரெண்டு தினுசும் இந்த நாளில் நடப்பது தாங்க
ஆண் : ஓஹோ… அப்படியா… ஆ… கொஞ்சம் இரு
தைரியத்துக்கொரு சந்தேகம் கேளு கண்மணி
அது தீரும் படி பதிலை எனக்கு சொல்லு அம்மணி
ஆண் : கல்யாணம் பண்ணுவது எதுக்காக
அதன் காரணத்த சொல்ல வேணும் கணக்காக
பெண் : உங்க அக்கா வயித்தில் மூணு மாசமாக வளருது
அந்த முத்து இன்னும் ஏழாம் மாதம்
பொறக்கப் போகுது
உங்க அக்கா வயித்தில் மூணு மாசமாக வளருது
அந்த முத்து இன்னும் ஏழாம் மாதம்
பொறக்கப் போகுது
அது ஆசையாக மாமாவுன்னு அழைக்கப் போகுது
அது ஆசையாக மாமாவுன்னு அழைக்கப் போகுது
அப்போ விஷயம் உங்களுக்கு புரிய போகுது