பாடகர் : எஸ். ஏ. ராஜ்குமார்
இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்
ஆண் : டேய் டேய் பயலே சின்னப்பயலே
நாளை உலகம் உன் கையிலே
டேய் டேய் பயலே சின்னப்பயலே
நாளை உலகம் உன் கையிலே
உழைச்சாலே வருங்காலம்
உருவாகும் உண்மையிலே
ஆண் : டேய் டேய் பயலே சின்னப்பயலே
நாளை உலகம் உன் கையிலே
உழைச்சாலே வருங்காலம்
உருவாகும் உண்மையிலே…..ஹே….
ஆண் : நியாயம் மறந்து திரியிற மனுஷன
நாய்கள் கூட மதிக்காது
நாளும் உழைக்கிற ஜனங்கள மிதிச்சா
சோறு தண்ணிக் கெடைக்காது
குழு : ஆமாண்ணே ஆமாண்ணே
அதுக்கு மேலே சொல்லண்ணே
ஆமாண்ணே ஆமாண்ணே
அதுக்கு மேலே சொல்லண்ணே
ஆண் : பொதுவா எதுக்கும் சட்டமில்லே
ஒழுங்கா நடக்கும் திட்டமில்லே
குழு : ……………………….
ஆண் : கலப்ப புடிச்சு உழுதவன்
கட்டாந்தரையில் கிடக்குறான்
வலுத்தவன் பொழைக்கிறான்
உழைச்சவன் துடிக்கிறான்
ஆண் : டேய் டேய் பயலே சின்னப்பயலே
நாளை உலகம் உன் கையிலே
உழைச்சாலே வருங்காலம்
உருவாகும் உண்மையிலே…
ஆண் : டேய் டேய் பயலே சின்னப்பயலே
நாளை உலகம் உன் கையிலே ஹேஹேய்
ஆண் : உடுத்த துணியில்ல
பொழைக்கவும் வழியில்ல
உறங்கி கிடந்தோம் ஊமைகளாய்
எதிர்க்க துணிவில்லை
தடுக்கவும் வழியில்ல
எதுக்கு பொறந்தோம் அடிமைகளாய்
குழு : ஆமாண்ணே ஆமாண்ணே
அதுக்கு மேலே சொல்லண்ணே
ஆமாண்ணே ஆமாண்ணே
அதுக்கு மேலே சொல்லண்ணே
ஆண் : விழுதா கெடந்தா நியாயமில்ல
அழுதா எதுக்கும் நீதியில்ல
குழு : …………………..
ஆண் : குனிய குனிய குட்டிடுவான்
எழுந்து நின்னா விட்டுடுவான்
எளச்சவன் துணியணும்
எதுக்கு நீ பணியணும்
ஆண் : டேய் டேய் பயலே சின்னப்பயலே
நாளை உலகம் உன் கையிலே
உழைச்சாலே வருங்காலம்
உருவாகும் உண்மையிலே…
ஆண் : டேய் டேய் பயலே சின்னப்பயலே
நாளை உலகம் உன் கையிலே
டேய் டேய் பயலே சின்னப்பயலே
நாளை உலகம் உன் கையிலே…ஹேய்…..