பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : சித்திரை மாசத்து பூங்காத்து….
ஏ முத்திரை போடுது பூமி இது…..
குத்தகை எடுத்து ஒத்திகை நடத்து
சந்தனத் தோப்புக்குள் மான் இருக்கு
சந்தர்ப்பம் காத்திருக்கு…..
பெண் : சித்திரை மாசத்து பூங்காத்து
சித்திரை மாசத்து பூங்காத்து
முத்திரை போடுது பூமி இது
பெண் : என்னை விழியால் ஒரு
வலை வீசி பிடித்தாயே
ஏக்கம் வரும் மாதிரி
எனை பார்த்ததும் சிரித்தாயே
ஆண் : காயம் தெரியாமல்
கண்களினால் எனை அடித்தாயே
கண்கள் சிவப்பேறிட
பெரும் போதையை கொடுத்தாயே
பெண் : போதை அது தெளிய
வைத்தியம் இங்கிருக்கு
ஆண் : வைத்தியத்தை அறிய
வாலிபம் காத்திருக்கு
பெண் : அட ராஜா உந்தன்
எண்ணம் போல நானும் நடப்பேன் ஹா…..
ஆண் : சித்திரை மாசத்து பூங்காத்து
ஏ சித்திரை மாசத்து பூங்காத்து
முத்திரை போடுது பூமி இது
குத்தகை எடுத்து ஒத்திகை நடத்து
சந்தனத் தோப்புக்குள் மான் இருக்கு
சந்தர்ப்பம் காத்திருக்கு…..
ஆண் : ஏ சித்திரை மாசத்து பூங்காத்து
ஏ சித்திரை மாசத்து பூங்காத்து
முத்திரை போடுது பூமி இது
குழு : டும்டும் டக்கு முக்கு
தாளம் போட்டுக்கிட்டு
சம்பா நெல்லு குத்து
டம்டம்டக்கு முக்குடும்டும்
கொட்டுக் கொட்டி
சந்தம் மெட்டுக் கட்டு
குழு : குஞ்சம் வச்சுப் பட்டு சேல கட்டு
மஞ்சள் வச்சு நல்ல மால கட்டு
டும்டும் டக்கு முக்கு தாளம் போட்டுக்கிட்டு
சந்தம் மெட்டுக் கட்டி பாட்டுக் கட்டு
குழு : லுலுலுலுலுலுலுலுலுலு
லுலுலுலுலுலுலுலு….
ஆண் : மங்கை இதழோரத்து
மலைத்தேன் துளி பெறலாமா
கூந்தல் நிழலோரத்தில்
கதை பேசிட வரலாமா
பெண் : இங்கு என்னைப் பார்த்த பின்
எதிர்க் கேள்விகள் எதற்காக
இந்த இளம் பூங்கொடி
ஆளானது உனக்காக
ஆண் : ஆசை என்னும் நெருப்பில்
தேகமும் காயுதடி
பெண் : மோகம் என்னும் நதியில்
வெப்பமும் தீருமையா
ஆண் : அடி மோகம் தீர்க்கும் கங்கை
என்றும் நீ தானடி ஹேய்……
பெண் : சித்திரை மாசத்து பூங்காத்து
ஏ முத்திரை போடுது பூமி இது
ஆண் : குத்தகை எடுத்து ஒத்திகை நடத்து
பெண் : சந்தனத் தோப்புக்குள்
மான் இருக்கு சந்தர்ப்பம் காத்திருக்கு…..
ஆண் : ஹே சித்திரை மாசத்து பூங்காத்து
பெண் : ஏ சித்திரை மாசத்து பூங்காத்து
ஆண் : ஏ சித்திரை மாசத்து பூங்காத்து
ஆண் மற்றும் பெண் :
முத்திரை போடுது பூமி இது