பாடகர் : இளையராஜா
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : சின்னக்குயில் ஒரு பாட்டு பாடுது
தன் அம்மா குயில் எங்கேன்னு தேடுது
ஆண் : {சின்னக்குயில் ஒரு பாட்டு பாடுது
தன் அம்மா குயில் எங்கேன்னு தேடுது} (2)
ஆண் : என்ன செய்யும் இந்தக்
குயில் கண்ணம்மா
பாவமடி சின்னக் குயில் அம்மம்மா…
ஆண் : சின்னக்குயில் ஒரு பாட்டு பாடுது
தன் அம்மா குயில் எங்கேன்னு தேடுது
ஆண் : அன்னைக் குயில் தன்னை இந்த
பிள்ளைக் குயில் பார்க்கலே
பிள்ளைக் குயில் ஏக்கம் தன்னை
தந்தைக் குயில் தீர்க்கலே
ஆண் : சின்னக்குயில் தாயின் அன்பை
தினம் தினம் காணாமே
உள்ளத்திலே வாட்டம் கொண்டு
உருகுது தூங்காமே
ஆண் : தந்தை உள்ளம்
எப்போதும் பூமியிலே…..ஏ…
பொங்கி வரும்
தாய் உள்ளம் ஆகாதே….
எந்தத் துணை
ஆனாலும் வாழ்க்கையிலே
சொந்தத் துணை
தாய் போல கிடையாதே….
தாயைப் போல பேசும்
தெய்வம் ஏதும் இல்லே….
ஆண் : சின்னக்குயில் ஒரு பாட்டு பாடுது
தன் அம்மா குயில் எங்கேன்னு தேடுது
ஆண் : பிள்ளைக்குயில்
வாழும் கூட்டில்
பெத்தக்குயில் வாழ்ந்தது
பெத்தக்குயில் கூட்டை விட்டு
காட்டுப் பக்கம் பறந்தது
ஆண் : அன்னைக்குயில்
கூட்டில் வேறோர்
ஆசைக்குயில் வந்தது
தந்தைக்குயில் உள்ளம் நோக
சண்டை இட்டுப் போனது
ஆண் : ஆதரவு இல்லாத
சிறு குயிலும்…ம்ம்…
வாடுதம்மா நீர் இல்லா
வயல் போல
தாயின் மடி காணாத
பிள்ளைக் குயில்….
சிந்துதம்மா கண்ணீரை நதி போல
ஏக்கம் தீரும்
நாளும் என்றுதான் வருமோ
ஆண் : சின்னக்குயில் ஒரு பாட்டு பாடுது
தன் அம்மா குயில் எங்கேன்னு தேடுது…..
ஆண் : என்ன செய்யும் இந்தக்
குயில் கண்ணம்மா
பாவமடி சின்னக்குயில் அம்மம்மா…
ஆண் : சின்னக்குயில் ஒரு பாட்டு பாடுது
தன் அம்மா குயில் எங்கேன்னு தேடுது