பாடகி : ஜோதி கண்ணா
இசை அமைப்பாளர் : டி. ஆர். ராஜு
பெண் : சின்ன சின்ன பாப்பா சிங்கார பாப்பா
சின்ன சின்ன பாப்பா சிங்கார பாப்பா
கண்ணான கண்ணே என்னாசை பெண்ணே
பொன்னே பூவே தாலேலோ
ஆராரோ ஆரிராரிராரோ
ஆராரோ ஆரிராரிராரோ……
பெண் : சிந்தாமணியில் சிதறிய மணிகள்
உந்தன் சிரிப்பம்மா..ஆ…ஆஅ…
சித்திரை நிலவே முத்திரை தருவேன்
நித்திரை கொள்ளம்மா….
நித்திரை கொள்ளம்மா….
பெண் : சின்ன சின்ன பாப்பா சிங்கார பாப்பா
சின்ன சின்ன பாப்பா சிங்கார பாப்பா
பெண் : உறவு கொள்ளாமல் உன்னைப் பெறாமல்
உனக்கு நான் அன்னையம்மா..ஆ…ஆஅ…
உண்மைகள் யாவும் ஊமைகள் ஆனால்
மௌனமே அழுகையம்மா
மௌனமே அழுகையம்மா
பெண் : ஆராரோ ஆரிராரிராரோ
ஆராரோ ஆரிராரிராரோ……