பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
குழு : ………………………..
ஆண் : பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ்……
வருங்காலம் உங்கள் கையில் வாருங்கள்
பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ்……
பருவத்தின் பாடல் எல்லாம் பாடுங்கள்
ஆண் : கிளி மொழி பேசும் பாவை
பனி பார்வையைக் கண்டு
மணி விழிகள் கனவில் நீந்தும்
பல இளம் காளைகள் உண்டு
நெஞ்சில் கோடி ஆசைகள் உண்டாகும்
காலமல்லவோ
நெஞ்சில் கோடி ஆசைகள் உண்டாகும்
காலமல்லவோ
குழு : ……………………………..
ஆண் : பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ்……
வருங்காலம் உங்கள் கையில் வாருங்கள்
ஆண் : வெல்வெட்டு மேனி கொண்ட மஞ்சள்
வண்ண மான்களுக்கு
ஈரெட்டு வயதல்லவோ
வெல்வெட்டு மேனி கொண்ட மஞ்சள்
வண்ண மான்களுக்கு
ஈரெட்டு வயதல்லவோ
உடல் வைரம் பாய்ந்து கிடக்க
புது வேகம் நரம்பில் துடிக்க
அழகிய ரோஜா அனுபவி ராஜா…..
அழகிய ரோஜா அனுபவி ராஜா…..
இந்த இளமை மீண்டும் வருமா…….
குழு : …………………………
ஆண் : ஹோய் பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ்……
வருங்காலம் உங்கள் கையில் வாருங்கள்
குழு : …………………………
ஆண் : பொன்னான வாலிபத்தின் நாடகத்தை
மேடையிட்டு கொண்டாடும் வேளையில்
எதிர்காலம் என்னவென்று
நெஞ்சம் நினைக்க வேண்டும் இன்று
நாளைய உலகில் வாழ்வது நாமே…..
நாளைய உலகில் வாழ்வது நாமே…..
இந்த நினைவு நாளும் வேண்டும்….
குழு : …………………………
ஆண் : பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ்……
வருங்காலம் உங்கள் கையில் வாருங்கள்
பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ்……
பருவத்தின் பாடல் எல்லாம் பாடுங்கள்