பாடகி : பி. சுசீலா
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பெண் : அடிமை நான் ஆணையிடு
ஆடுகிறேன் பாடுகிறேன்
அடிமை நான் ஆணையிடு
ஆடுகிறேன் பாடுகிறேன்
மதுவை நீ ஊற்றிக்கொடு
மயங்குகிறேன் மாறுகிறேன்
பெண் : அடிமை நான் ஆணையிடு
ஆடுகிறேன் பாடுகிறேன்
பெண் : சபை நடுவே நின்றாடிடும் பெண்மை
சாவியில் ஆடிடும் பொம்மை
சபை நடுவே நின்றாடிடும் பெண்மை
சாவியில் ஆடிடும் பொம்மை
பால் மயக்கம் சிறுபிள்ளையிலே
நூல் மயக்கம் பின்பு பள்ளியிலே
பால் மயக்கம் சிறுபிள்ளையிலே
நூல் மயக்கம் பின்பு பள்ளியிலே
கள் மயக்கம் நீ கொடுக்கையிலே
கள் மயக்கம் நீ கொடுக்கையிலே
கண் மயங்கும் இந்த பெண் மயங்கும்
பெண் : அடிமை நான் ஆணையிடு
ஆடுகிறேன் பாடுகிறேன்
பெண் : …………………………
பெண் : மதுவெடுத்து உன் மலரடி நனைத்தேன்
பாத பூஜையை முடித்தேன்
மதுவெடுத்து உன் மலரடி நனைத்தேன்
பாத பூஜையை முடித்தேன்
புது பழக்கம் இந்த மது பழக்கம்
பொறுத்திரு பழகி வரும் வரைக்கும்
புது பழக்கம் இந்த மது பழக்கம்
பொறுத்திரு பழகி வரும் வரைக்கும்
உனக்காக கோப்பையை நான்
உனக்காக கோப்பையை நான்
ஏந்துகிறேன் அதில் நீந்துகிறேன்
பெண் : அடிமை நான் ஆணையிடு
ஆடுகிறேன் பாடுகிறேன்
மதுவை நீ ஊற்றிக்கொடு
மதுவை நீ ஊற்றிக்கொடு
மயங்குகிறேன் மாறுகிறேன்
அடிமை நான் ஆணையிடு
ஆடுகிறேன் பாடுகிறேன்