அந்தி சாயும் வேளை என் அத்தான் வருவார்
அக்கம் பக்கம் பார்த்து என் பக்கம் வருவார்
ஆடு மயிலே என்பார் தமிழ் கவி பாட..மலர்க்
கொடி போல நான் ஆட அவர் பாடுவார் (அந்தி)
வரலாறு கூறும் கலை காதல் வாழ்வின்
வழி வந்த செல்வம் நீயே என்பார்
அறியாத மாந்தர் திரை போட்டும் காதல்
அழியாதென்று அறிவூட்டுவார் – ஆசை
கண்ணாளன் பண்பாட நான் ஆடுவேன்..(அந்தி)
மனக் கண்ணிலாடும் மகராசன் தன்னை
மணமாலை சூடும் நாளெந்த நாளோ....
இனிப்பான சேதி தரும் காலந்தன்னை
எதிர்பார்த்து நெஞ்சம் அலைமோதுதே – ஆசை
கண்ணாளன் பண்பாட நான் ஆடுவேன்..(அந்தி)
வருங்கால வாழ்வின் மகராசி என்று
மனதார என்னை அவர் சொல்வதுண்டு
என் வாழ்வின் ஜோதி அவரின்றி பாரில்
எனக்கேது இன்பம் எதிர்பார்க்கும் அன்பின்
கண்ணாளன் பண்பாட நான் ஆடுவேன்..(அந்தி)