பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : சந்திரபோஸ்
ஆண் : ஆண்டவனப் பாக்கணும்
அவனுக்கும் ஊத்தணும்
அப்போ நான் கேள்வி கேக்கனும் சர்வேசா
தலைஎழுத்தெந்த மொழியடா ஓ ஓ…..
தப்பி செல்ல என்ன வழியடா….
ஆண் : ஆண்டவனப் பாக்கணும்
அவனுக்கும் ஊத்தணும்
அப்போ நான் கேள்வி கேக்கனும் சர்வேசா
தலைஎழுத்தெந்த மொழியடா ஓ ஓ…..
தப்பி செல்ல என்ன வழியடா….
ஆண் : நாவுக்கு அடிமைதான் ஆறு வயசுல
பூவுக்கு அடிமை பதினாறு வயசுல
நோவுக்கு அடிமைதான் பாதி வயசுல
சாவுக்கு அடிமை அட நூறு வயசுல
ஆண் : அடிமைகளாய் பொறந்துவிட்டோம்
அதை மட்டும்தான் மறந்துவிட்டோம்
அந்த பாசம் அன்பு கூட
சிறைவாசம் தானடா…..
ஆண் : ஆண்டவனப் பாக்கணும்
அவனுக்கும் ஊத்தணும்
அப்போ நான் கேள்வி கேக்கனும் சர்வேசா
தலைஎழுத்தெந்த மொழியடா ஆ ஹா….ஓஓ…
தப்பி செல்ல என்ன வழியடா
ஆண் : காதலிக்க எனக்கு ஒரு யோகமில்லையே
ஆண்டவனே உனக்கும் அனுதாபமில்லையே
ராஜ்ஜியமும் இருக்கு அதில் ராணி இல்லையே
காசு பணம் இருக்கு ஒரு காதல் இல்லையே
ஆண் : சொல்ல எனக்கு வழி இல்லையே
சொல்லி முடிக்க மொழி இல்லையே
அழுதாலும் தொழுதாலும்
தெய்வம் பார்க்கவில்லையே….
ஆண் : ஆண்டவனப் பாக்கணும்
அவனுக்கும் ஊத்தணும்
அப்போ நான் கேள்வி கேக்கனும் சர்வேசா
தலைஎழுத்தெந்த மொழியடா டேய் ஹஹஹா…..
தப்பி செல்ல என்ன வழியடா