பாடகி : பி. சுசீலா
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பெண் : அம்மாவே தெய்வம் ஆகாய தீபம்
தாய் சிந்தும் கண்ணீர் நெஞ்சை சுடும்
பிள்ளை காணாமல் இங்கு வாடும் பூமாலை
சோகம் தாளாமல் ரெண்டு கண்ணில் நீரோடை
பெண் : அம்மாவே தெய்வம் ஆகாய தீபம்
தாய் சிந்தும் கண்ணீர் நெஞ்சை சுடும்
குழு : ………………………….
பெண் : வேதனை வழக்கு விழிகளில் இருட்டு
திரியினைத் தேடுது விளக்கு
பால் முகம் நினைந்து மேலுடை நனைந்து
கிளி தவிக்கும் சிறையிருந்து
வெயிலை சுமப்பாள் நிழல் கொடுத்து
பெண் : அந்த ஆராரோ மறந்து
மனம் போராடும் நினைந்து
பெண் : அம்மாவே தெய்வம் ஆகாய தீபம்
தாய் சிந்தும் கண்ணீர் நெஞ்சை சுடும்
பெண் : தாய்மையின் தவிப்பால்
குழந்தையை எடுப்பாள்
பூக்களினால் முகம் துடைப்பாள்
சேலையின் தலைப்பால் காற்றினைத் தடுப்பாள்
காயம் படும் என நினைப்பாள்
துரும்பு விழுந்தால் முகம் சிவப்பாள்
பெண் : அவள் தன் மேனி கொடுப்பாள்
தன் கண்ணீரில் இனிப்பாள்
பெண் : அம்மாவே தெய்வம் ஆகாய தீபம்
தாய் சிந்தும் கண்ணீர் நெஞ்சை சுடும்
பெண் : தாய் விழி அழுதால் சூரியன் அழுமே
பாறைகளும் கசிந்திடுமே
பாலோடு அன்னை பசியோடு பிள்ளை
சோகங்களே அவள் வரமே
வெயிலில் வதங்கும் மலர் சரமே
பெண் : அந்த ஆகாயம் சிறிது
அவள் தியாகங்கள் பெரிது……
பெண் : அம்மாவே தெய்வம் ஆகாய தீபம்
தாய் சிந்தும் கண்ணீர் நெஞ்சை சுடும்
பிள்ளை காணாமல் இங்கு வாடும் பூமாலை
சோகம் தாளாமல் ரெண்டு கண்ணில் நீரோடை
பெண் : அம்மாவே தெய்வம் ஆகாய தீபம்
தாய் சிந்தும் கண்ணீர் நெஞ்சை சுடும்