பாடகர் : மனோ
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் குழு : திந்தன் தாங்கிட
திந்தன் தாங்கிட
பெண் குழு : ஓஒ…….ஓஓ….ஓஓ
ஆண் குழு : ஓஓ……திந்தன் தாங்கிட
திந்தன் தாங்கிட
பெண் குழு : தந்தந் தோம் தோம்
ஆண் குழு : திந்தன் தாங்கிட
திந்தன் தாங்கிட
பெண் குழு : ஓஒ…….ஓஓ….ஓஓ
ஆண் குழு : ஓஓ……திந்தன் தாங்கிட
திந்தன் தாங்கிட
பெண் குழு : தந்தந் தோம் தோம்
ஆண் : அக்கரை இல்லா
எங்க வாழ்க்கையிலே
அக்கறை கொண்ட கடல் தாயம்மா
ஆண் : ஒரு நித்திரை இல்லா
எங்க வேலையிலே
நம்பிக்கை தந்த நிழல் நீயம்மா
ஆண் மற்றும் குழு : கரை காணாத
வாழ்க்கையத்தான் தேடுறோம்
அட ஆனாலும்
நிம்மதியா பாடுறோம்
பெண் குழு : கரை காணாத
வாழ்க்கையத்தான் தேடுறோம்
அட ஆனாலும்
நிம்மதியா பாடுறோம்
ஆண் மற்றும் குழு : அக்கரை இல்லா
எங்க வாழ்க்கையிலே
அக்கறை கொண்ட கடல் தாயம்மா
ஆண் : அக்கரை இல்லா
எங்க வாழ்க்கையிலே
ஆண் : பொழுதான நேரம்
பெண்டு பிள்ளையாரும்
கரை ஓரம் கை காட்ட
தோணியில் ஏறும்
பெண் குழு : தொலை தூரங்கள் போகும்
எங்க மீனவர் கூட்டம்
ஆண் குழு : ஹீஹிம் ம்ம்ம்ம்….
ஆண் : பொழப்பேது வேறு
பொங்கணுமே சோறு
புயல் போலே சுழல் காத்து
வீசுற போது
பெண் குழு : நிதம் பாடுகள் நூறு
படும் சாதியப் பாரு
ஆண் குழு : ஹீஹிம் ம்ம்ம்ம்….
குழு : ம்ம்ம்ம்….ம்ம்ம்ம்….ம்ம்ம்…..
ம்ம்ம்ம்….ம்ம்ம்ம்….ம்ம்ம்…..
ஆண் : எங்க உயிர் மீண்டு வர
எத்தனையோ சங்கடம்
எங்க சனம் கை விளக்க ஏத்தி
வெச்சு கும்பிடும்
ஆண் குழு : ஆயினும் எங்களுக்கு
நோய் நொடி இன்றி
கரை சேர்த்திட இங்கு
கடல் தாயவள் உண்டு
பெண் குழு : அக்கரை இல்லா
எங்க வாழ்க்கையிலே
அக்கறை கொண்ட கடல் தாயம்மா
குழு : அக்கரை இல்லா
எங்க வாழ்க்கையிலே…..
ஆண் : நமக்காகக் காலம்
நல்ல வழி காட்டும்
மயங்காதே தயங்காதே
நேர் வழி போனா
பெண் குழு : நம்ம வேர்வையப் பார்த்து
நல்ல பேர் வரும் தானா
ஆண் குழு : ஹீஹிம் ம்ம்ம்ம்….
ஆண் : தவறாது நீதி
செம்பளவன் சாதி
சரியாக முறையாக
உண்மையே பேசும்
பெண் குழு : ஒரு பொய் மொழி கூற
எங்கள் நாக்குகள் கூசும்
ஆண் குழு : ஹீஹிம் ம்ம்ம்ம்….
குழு : ம்ம்ம்ம்….ம்ம்ம்ம்….ம்ம்ம்…..
ம்ம்ம்ம்….ம்ம்ம்ம்….ம்ம்ம்…..
ஆண் : உள்ள வரை நல்லவனா
வாழுறது லட்சியம்
நல்லவனா வாழுறப்போ
வெற்றி வரும் நிச்சயம்
ஆண் குழு : மீனவர் எங்களுக்கு
மேன்மைகள் சேர
அருள் வார்த்திட இங்கு
கடல் தாயவள் உண்டு
ஆண் : அக்கரை இல்லா
எங்க வாழ்க்கையிலே
அக்கறை கொண்ட கடல் தாயம்மா
ஆண் : ஒரு நித்திரை இல்லா
எங்க வேலையிலே
நம்பிக்கை தந்த நிழல் நீயம்மா
ஆண் குழு : கரை காணாத
வாழ்க்கையத்தான் தேடுறோம்
அட ஆனாலும்
நிம்மதியா பாடுறோம்
பெண் குழு : கரை காணாத
வாழ்க்கையத்தான் தேடுறோம்
அட ஆனாலும்
நிம்மதியா பாடுறோம்
ஆண் மற்றும் குழு : அக்கரை இல்லா
எங்க வாழ்க்கையிலே
அக்கறை கொண்ட கடல் தாயம்மா
ஆண் மற்றும் குழு : ஒரு நித்திரை இல்லா
எங்க வேலையிலே
நம்பிக்கை தந்த நிழல் நீயம்மா