அடி என்னடி உலகம் இதில் எத்தனை கலகம்
அடி என்னடி உலகம் இதில் எத்தனை கலகம்
பந்தம் என்பது சிலந்தி வலை பாசம் என்பது பெரும் கவலை
சொந்தம் என்பது சந்தையடி இதில் சுற்றம் என்பது மந்தையடி
பந்தம் என்பது சிலந்தி வலை பாசம் என்பது பெரும் கவலை
சொந்தம் என்பது சந்தையடி இதில் சுற்றம் என்பது மந்தையடி
அடி என்னடி உலகம் இதில் எத்தனை கலகம்
செக்கு மீது ஏரிகொண்டால் சிங்கபூரு போகுமா
சேர்ந்தவர்கே பாடுபட்டால் பெண்ணின் தேவை தீருமா
கொக்கைப்பார்த்து கற்றுகொள்ளு வாழ்க்கை என்ன என்பதை
கொத்தும் போது கொத்தி கொண்டு போக வேண்டும் நல்லதை ஃபடாஃபட்
அடி என்னடி உலகம் இதில் எத்தனை கலகம்
கோடு போட்டு நிற்க சொன்னான் சீதை நிற்கவில்லையே
சீதை அங்கு நின்றிருந்தால் ராமன் கதை இல்லையே
கோடு போட்டு நிற்க சொன்னான் சீதை நிற்கவில்லையே
சீதை அங்கு நின்றிருந்தால் ராமன் கதை இல்லையே
கோடு வட்டம் என்பதெல்லாம் கடவுள் போட்டதல்லடி
கொள்ளும்போது கொள்ளு தாண்டி செல்லும்போது செல்லடி ஃபடஃபட்
அடி என்னடி உலகம் இதில் எத்தனை கலகம்
காதல் போதை என்பதெல்லாம் காமதேவன் கட்டளை
காமதேவன் கட்டளைக்கு காதலர்கள் முத்திரை
பங்குனிக்கு பின்பு என்ன ஐயமின்றி சித்திரை
பார்பதெல்லாம் பார்க்க வேண்டும் பழமை ஒரு கண்திரை ஃபடஃபட்
அடி என்னடி உலகம் இதில் எத்தனை கலகம்
பந்தம் என்பது சிலந்தி வலை பாசம் என்பது பெரும் கவலை
சொந்தம் என்பது சந்தயடி இதில் சுற்றம் என்பது மந்தையடி
பந்தம் என்பது சிலந்தி வலை பாசம் என்பது பெரும் கவலை
சொந்தம் என்பது சந்தயடி இதில் சுற்றம் என்பது மந்தையடி
அடி என்னடி உலகம் இதில் எத்தனை கலகம்