ஆராரிராரோ நான் பாடுகின்றேன்
உன் சோகம் மறந்து தூங்கடி
உன் காயம் எல்லாம் தானாகத் தீரும்
என் தோளில் சாய்ந்து தூங்கடி
கனவாய் எல்லாம் மறைந்தே போகும்
விடிந்தால் இருள் விட்டுப் பறக்கும்
உனக்காய் தினம் விழித்தேன் அன்பே
உறங்கவில்லையே
கண்ணீர் உந்தன் கன்னத்தைத் தொட்டால்
என் விரல் வந்து தொட்டுத் துடைக்கும்
வெண்ணிலா மேலே கறைகள் எல்லாம்
குறைகள் இல்லையே.........(ஆராரிராரோ)
உயிரே உந்தன் உணர்வில் ஒரு
சலனம் இன்று என்ன நினைப்பு
வலிகள் எல்லாம் தொலையும் வரை
காவலிருப்பேன்.......
முள் மேல் உந்தன் நிழல் விழுந்ததால்
குறைந்தா விடும் உன் மதிப்பு
உன்னைப் பார்க்கின்ற நொடி போதுமே
உயிர் பிழைப்பேன்.........(ஆராரிராரோ)