பாடகர் : கார்த்திக் குமார்
இசையமைப்பாளர் : அர்ரோல் கொரெல்லி
ஆண் : ஆண்டவன் தூரிகையில்
நீ மானுட ஓவியம்
அரை நொடி கோபத்திலும்
உன் வண்ணம் போய் விடும்
ஆண் : யானை போல் தோன்றும் கோபம்
எறும்பாக தேய்ந்தே போகும்….
காத்திரு……காத்திரு
ஆத்திரம் சேர்த்தே வைக்கும்
பாத்திரம் இல்லை நெஞ்சம்
ஒரு வழி பாதை வாழ்க்கை மறவாதே
ஆண் : மறவாதே மனமே
சிறு தவறாலே உயிர் பறிபோகும்
மறவாதே மனமே வாழ்விலே
மறவாதே மனமே
உன் நிழல்கூட உன் கால் வரும்
மறவாதே மனமே வாழ்விலே
ஆண் : சூழ்நிலையின் கையில் நீயும்
சோழி என மாறிடலாமா
காற்றில் தூசு போல்
உன் காலம் போவதா
காய்ச்சு வெச்ச இரும்பின் மேலே
ஊற்றிடும் நீரை போலே
சீறி பாய்வதா
உன்னை கோபம் ஆள்வதா
ஆண் : யாரோ ஒரு இனியவனை
உன் சினம் பெரும் பகை ஆக்கிவிடும்
யாரோ ஒரு கொடியவனை
புன்னகை தோழமை ஆக்கி தரும்
ஆண் : ஆண்டவன் தூரிகையில்
நீ மானுட ஓவியம்
அரை நொடி கோபத்திலும்
உன் வண்ணம் போய் விடும்