வீட்டில் ஜாதக புத்தகத்தை எங்கே எப்படி வைத்தால் நல்லது நடக்கும் .

நம்முடைய ஜாதக புத்தகத்திற்கு நாம் கொடுக்கக்கூடிய மரியாதை, நம் வாழ்க்கைக்கு நாம் கொடுக்கும் மரியாதை ஆக கருதப்படுகிறது.

 0  16
வீட்டில் ஜாதக புத்தகத்தை எங்கே எப்படி  வைத்தால்  நல்லது நடக்கும் .

நம்முடைய வாழ்க்கையையும், தலையெழுத்தையும் நிர்ணயிப்பது நாம் பிறந்த நேரமும் காலமும் தான். அந்த பிறந்த நேரத்தையும் காலத்தையும் வைத்து கணிப்பது தான் ஜாதகம். நவ கிரகங்களின் ஆதிக்கம் நிறைந்த, நம்முடைய வாழ்க்கையில் கஷ்ட நஷ்டங்களை தந்து, வாழ்க்கை என்றால் என்னவென்று புரிய வைக்கக் கூடிய நம்முடையதாக ஜாதக புத்தகத்தை நம்முடைய வீட்டில் நாம் எப்படி வைக்க வேண்டும். எப்படி வைக்கக்கூடாது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

நிறைய பேர் வீடுகளில் ஜாதக புத்தகத்திற்கு கொடுக்க வேண்டிய மதிப்பும் மரியாதையும் கொடுக்கவே மாட்டார்கள். ஜாதக புத்தகம் பத்தோடு பதினொன்றாக குப்பை கூளங்கள் உடன் சேர்ந்து இருக்கும். அப்படி வைக்கவே கூடாது. குறிப்பாக ஜாதக புத்தகத்தை எந்த ஒரு பிளாஸ்டிக் கவரிலும் போட்டு சுருட்டி வைக்கக் கூடாது.

நம்முடைய ஜாதக புத்தகம் எப்போதும் மங்களகரமான மஞ்சள் நிறத் துணி பையில் வைத்து பூஜை அறையில் தான் இருக்க வேண்டும். இதேபோல் ஜாதக புத்தகத்திற்கு நான்கு மூலைகளிலும் மஞ்சள் தடவி நடுவே ஒரு மஞ்சள் பொட்டு வைப்பது மிகவும் நல்லது என்று சொல்லப்பட்டுள்ளது. நம்முடைய தலையெழுத்தை நிர்ணயிக்கும் நம்முடைய ஜாதக புத்தகத்திற்கு நாம் கொடுக்கக்கூடிய மரியாதை, நம் வாழ்க்கைக்கு நாம் கொடுக்கும் மரியாதை ஆக கருதப்படுகிறது.

ஜாதகம் பார்க்க, ஜாதக புத்தகத்தை எடுத்து செல்லும்போது அதை நீங்கள் மஞ்சள் பையில் தான் வைத்து எடுத்துச் செல்ல வேண்டும். நிறைய பேருக்கு ஜாதகரீதியாக திருமண தடை, குழந்தை பாக்கியம் இல்லாமல் இருக்கும், வேலை கிடைக்காமல் இருக்கும், வாழ்க்கையில் பல வகையான பிரச்சினைகள் இந்த ஜாதகத்தின் அடிப்படையில் தான் வருகின்றது.

ஜாதக புத்தகத்தை கவனத்துடன் கையாளுபவர்களுக்கு, ஜாதகத்தை மஞ்சள் பையில் எடுத்து பத்திரமாக வைப்பவர்களுக்கு ஏற்படக்கூடிய சுபகாரிய தடைகளும் விலகும் என்று சொன்னாலும் அது மிகையாகாது. உங்களுடைய வாழ்க்கையில் தீராத கஷ்டங்கள் இருப்பின் வாழ்க்கையில் சுபகாரிய தடை வந்து கொண்டே இருப்பின், உங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் அத்தனை பேருடைய ஜாதகத்தையும் ஒன்றாக எடுத்துக் கொள்ளுங்கள். அந்த ஜாதக புத்தகத்திற்கு நான்கு பக்கமும் மஞ்சள் குங்குமத்தை வைத்து நடுவில் ஒரு மஞ்சள் பொட்டு வைத்து பூஜை அறையில் வைத்து, ஒரு தீபம் ஏற்றி வைத்து, குலதெய்வத்தை மனதார வேண்டி, அதன் பின்பு அந்தப் புத்தகத்தை எடுத்து ஒரு மஞ்சள் பையில் போடுங்கள்.

பூஜை அறையில் இருக்கும் ஏதாவது ஒரு ஆணியில் இந்த மஞ்சள் பையை மாட்டி தொங்க விடுங்கள். ஜாதகரீதியாக உங்களுக்கு வரக்கூடிய கஷ்டங்கள் எதுவும் பெரிய பாதிப்பினை கொடுத்து விடக்கூடாது என்று, குலதெய்வத்தை மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். உங்களுடைய ஜாதகத்தில் இருக்கும் தலையெழுத்து மாற வேண்டும் என்று நினைத்து இப்படி செய்தால், உங்களுடைய வாழ்க்கையில் நிறைய நல்ல மாற்றங்களை பெற முடியும்.

மஞ்சள் என்பது மங்களகரத்தினை குறிப்பது. குரு பகவானுக்கு உரிய நிறம் என்பதால் நிச்சயம் உங்கள் வாழ்வில் நல்லது மட்டுமே நடக்கும். காரண காரியங்கள் இல்லாமல் நம்முடைய முன்னோர்கள் எதையும் நமக்கு சொல்லிவிட்டு செல்லவில்லை. நம்பிக்கையோடு செய்து பாருங்கள். சுப காரிய தடை விலக சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ள பல விஷயங்களில் இதுவும் ஒன்று. நம்பிக்கை உள்ளவர்கள் முயற்சி செய்து பார்த்து நல்ல பலன் அடையலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow