சமந்தாவின் வாழ்த்துக்கு நன்றியைத் தவிர்த்த நாகார்ஜுனா

தெலங்கானா மாநிலத்தில் உள்ள கிராமப்பகுதி ஒன்றில் தனது தோழி குடும்பத்தினருடன் ஓய்வெடுத்து வருகிறார்.

Sep 1, 2021 - 04:35
 0  543
சமந்தாவின் வாழ்த்துக்கு நன்றியைத் தவிர்த்த நாகார்ஜுனா

தெலுங்குத் திரையுலகில் நடிகர் நாக சைதன்யா, நடிகை சமந்தா தம்பதியினரின் திருமண வாழ்க்கையைப் பற்றிய செய்திகள்தான் மிகவும் பரபரப்பாகப் போய்க் கொண்டிருக்கிறது. பல வருட காதலுக்குப் பிறகு நாக சைதன்யா, சமந்தா இருவரும் மூன்று வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். மூன்று வருடங்கள் கடந்த நிலையில் தற்போது அவர்களுக்குள் பிரிவினை வந்துவிட்டதாக தெலுங்கு ஊடகங்கள் பரபரப்பாக எழுதி வருகின்றன.

சமந்தா தற்போது தெலங்கானா மாநிலத்தில் உள்ள கிராமப்பகுதி ஒன்றில் தனது தோழி குடும்பத்தினருடன் ஓய்வெடுத்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு சமந்தாவின் மாமனார் நாகார்ஜுனாவின் பிறந்த நாளன்று சமந்தா அவருக்கு டுவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்திருந்தார். தனக்கு வாழ்த்து தெரிவித்த சில முக்கிய நடிகர்கள், நடிகைகளுக்கு தனது மகன் நாக சைதன்யாவுக்கு வாழ்த்துக்கு நன்றி தெரிவித்திருந்தார் நாகார்ஜுனா. ஆனால், இதுவரையிலும் சமந்தாவுக்கு அவர் நன்றி தெரிவிக்கவில்லை.

இதைக் கூட தெலுங்கு திரையுலகத்தில் பரபரப்பாகப் பேசிக் கொள்கிறார்கள். தெலுங்கு பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை விரைவில் தொகுத்து வழங்க உள்ளார் நாகார்ஜுனா. அதற்காக பத்திரிகையாளர் சந்திப்பு நடத்த வேண்டி இருக்கிறதாம். தனது மகன் நாக சைதன்யா, சமந்தா பற்றி அதில் கேள்வி எழுந்தால் என்ன செய்வது என நாகார்ஜுனா யோசித்து வருவதாகவும், அந்த சந்திப்பையே ரத்து செய்யலாமா, அல்லது நடத்தலாமா என தயங்கி வருகிறார்கள் என்றும் சொல்கிறார்கள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow