மே 26
வரலாற்று நிகழ்வுகள்
ஆப்கானிஸ்தான் அரசை உருவாக்க முடிவான கண்டமாக் உடன்பாட்டில் உருசியப் பேரரசும் ஐக்கிய இராச்சியமும் கையெழுத்திட்டன.
Events
1879
மே 26
1879
மே 26 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1978 இராணுவப் புரட்சியை அடுத்து ஆப்கானித்தான் மக்கள் சனநாயகக் கட்சி ஆப்கானித்தானின் ஆட்சியைக் கைப்பற்றியதுடன் ஆப்கானித்தானில் போர் தொடங்கியது. ஏப்பிரல் 27 · வரலாற்று நிகழ்வுகள்
- 1978 ஆப்கானிஸ்தான் அரசுத்தலைவர் முகமது தாவூது கான் கம்யூனிச சார்புப் போராளிகளால் பதவியிறக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். ஏப்பிரல் 28 · வரலாற்று நிகழ்வுகள்
- 1979 ஆப்கானித்தானுக்கான ஐக்கிய அமெரிக்காவின் தூதுவர் அடொல்ஃப் டப்ஸ் காபூலில் கடத்தப்பட்டார். இவர் பின்னர் காவற்துறையினருக்கும் கடத்தல்காரருக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையில் அகப்பட்டு இறந்தார். பெப்ரவரி 14 · வரலாற்று நிகழ்வுகள்
- 1979 ஆப்கானித்தானில் மாவோயிசப் போராளிகள் கம்யூனிச அரசுக்கு எதிராகக் கிளர்ச்சியில் இறங்கினர். ஆகத்து 5 · வரலாற்று நிகழ்வுகள்
- 1980 ஆப்கானித்தானில் சோவியத் ஆக்கிரமிப்பை எதிர்த்து மாஸ்கோவில் 1980 ஒலிம்பிக் விளையாட்டுகளைப் பகிஷ்கரிப்பதாக ஐக்கிய அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டர் அறிவித்தார். மார்ச்சு 21 · வரலாற்று நிகழ்வுகள்
- 1989 ஒன்பது ஆண்டு கால ஆக்கிரமிப்புக்குப் பின் ஆப்கானித்தானிலிருந்து அனைத்து சோவியத் படைகளும் வெளியேறியதாக அறிவிக்கப்பட்டது. பெப்ரவரி 15 · வரலாற்று நிகழ்வுகள்
- 1996 ஆப்கானிஸ்தானில் முகமது ஓமார் தலைமையிலான தலிபான் தீவிரவாதிகள் காபூல் நகரைக் கைப்பற்றி அரசுத்தலைவர் புரானுதீன் ரபானியை ஆட்சியிலிருந்து விரட்டினர். முன்னாள் அரசுத்தலைவர் முகமது நஜிபுல்லா காபூல் நகர மின்சாரக் கம்பத்தில் மக்கள் முன்னிலையில் தூக்கிலிடப்பட்டுக் கொல்லப்பட்டார். செப்டம்பர் 27 · வரலாற்று நிகழ்வுகள்
- 1998 ஆப்கானித்தானின் சரக்கு விமானம் ஒன்று பாக்கித்தானில் மலை ஒன்றில் மோதியதில் 50 பேர் உயிரிழந்தனர். சனவரி 14 · வரலாற்று நிகழ்வுகள்
மே 26 அன்று மேலும்
- 17 செருசுக்கி, சாட்டி, மற்றும் எல்பா ஆற்றின் மேற்கே உள்ள செருமானியக் குடிகள் வாழும் பகுதிகளை வெற்றி கொண்ட உரோமைப் பேரரசின் தளபதி செருமானிக்கசு பெரும் வரவேற்புடன் ரோம் திரும்பினான். வரலாற்று நிகழ்வுகள்
- 451 ஆர்மீனியக் கிளர்ச்சியாளர்களுக்கும் சாசானியப் பேரரசுக்கும் இடையில் சமர் இடம்பெற்றது. சாசானிதுகள் ஆர்மீனியர்களைத் தோற்கடித்தனராயினும், அவர்களுக்கு கிறித்தவத்தைப் பின்பற்ற முழு உரிமையும் அளிக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 735 பீட், ஆங்கிலேய வரலாற்றாளர், மதகுரு, இறையியலாளர் (பி. 672) இறப்புகள்
- 946 இங்கிலாந்து மன்னர் முதலாம் எட்மண்டு திருடன் ஒருவனால் படுகொலை செய்யப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 961 புனித உரோமைப் பேரரசர் முதலாம் ஒட்டோ தனது 6 வயது மகன் இரண்டாம் ஒட்டோவை தனது முடிக்குரிய வாரிசாக அறிவித்து, கிழக்கு பிராங்கிய இராச்சியத்தின் துணை ஆட்சியாளராக அறிவித்தார். இரண்டாம் ஒட்டோ ஆகனில் முடிசூடினான். வரலாற்று நிகழ்வுகள்
- 1135 அனைத்து எசுப்பானியாவின் பேரரசராக ஏழாம் அல்போன்சோ லியோன் பெருங்கோவிலில் முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1293 சப்பான் கமகூரா என்ற இடத்தில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 23,000 பேர் உயிரிழந்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1538 பிரான்சின் சீர்திருத்தக் கிறித்தவ இயக்கத்தைச் சேர்ந்த ஜான் கால்வின் மற்றும் அவரது சீடர்கள் ஜெனீவா நகரில் இருந்து வெளியேற்றப்பட்டனர். கால்வின் அடுத்த மூன்றாண்டுகள் பிரான்சின் ஸ்திராஸ்பூர்க் நகரில் வாழ்ந்தார். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ஆப்கானிஸ்தான் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.