பிக்பாஸ் சீசன் 5-ல் களமிறங்கும் பிரபல வில்லி.
வனிதாவை மிஞ்சும் அளவிற்கு களமிறங்கும் பிரபல வில்லி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தமிழ் ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்து வருகின்றனர். இதன் விளைவாக இதுவரை 4 சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்து, 5வது சீசன் வரும் அக்டோபர் மாதத்தின் மூன்றாவது வாரத்தில் தொடங்கி, அடுத்த வருடம் ஜனவரி மாதம் நிறைவடையவுள்ளது
எனவே பிக்பாஸ் சீசன்5 நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் இதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் பற்றிய தகவல்கள் தற்போது இணையத்தில் கசிகிறது.
இந்த சீசனில் சந்தோஷ் பிரதாப், பிரதைனி சர்வா, கோபிநாத் ரவி, பவானி ரெட்டி ஆகியோர் பங்கேற்கப் போவதாக ஏற்கனவே தகவல் வெளியானது.இவர்களுடன் நடிகை சூசன் பிக்பாஸ் ஐந்தாவது சீசனில் பங்கேற்க உள்ளதாக தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
மைனா, ராட்சசன், நண்பேண்டா, அர்ஜுனன் என் காதலி, ராரா, நர்த்தகி போன்ற படங்களில் வில்லி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு பரிச்சயமானவர் தான் நடிகை சூசன்.
What's Your Reaction?






