1 நாளாகமம்

1 நாளாகமம் 2:23
கேசூரையும் ஆராமையும் யாவீரின் கிராமங்களையும், கேனாத்திலுள்ள கிராமங்களாகிய அறுபது ஊர்களையும் அவர்கள் கையிலே வாங்கினார்கள்; இவர்கள் எல்லாரும் கிலெயாத்தின் தகப்பனாகிய மாகீரின் குமாரர்.
view More
1 நாளாகமம் 2:24
காலேபின் ஊரான எப்ராத்தாவில் எஸ்ரோன் இறந்துபோனபின், எஸ்ரோனின் பெண்ஜாதியாகிய அபியாள் அவனுக்குத் தெக்கொவாவின் தகப்பனாகிய அசூரைப் பெற்றாள்.
view More
1 நாளாகமம் 2:25
எஸ்ரோனுக்கு முதற்பிறந்த யெர்மெயேலின் குமாரர், ராம் என்னும் மூத்தவனும், பூனா, ஓரென், ஓத்சேம், அகியா என்பவர்களுமே.
view More
1 நாளாகமம் 2:26
அத்தாராள் என்னும் பேருள்ள வேறொரு மனைவியும் யெர்மெயேலுக்கு இருந்தாள்; இவள் ஓனாமின் தாய்.
view More
1 நாளாகமம் 2:27
யெர்மெயேலுக்கு முதற்பிறந்த ராமின் குமாரர், மாஸ், யாமின், எக்கேர் என்பவர்கள்.
view More
1 நாளாகமம் 2:28
ஓனாமின் குமாரர், சம்மாய், யாதா என்பவர்கள்; சம்மாயின் குமாரர், நாதாப், அபிசூர் என்பவர்கள்.
view More
1 நாளாகமம் 2:29
அபிசூருடைய மனைவியின் பேர் அபியாயேல்; அவள் அவனுக்கு அக்பானையும் மோளிதையும் பெற்றாள்.
view More
1 நாளாகமம் 2:30
நாதாபின் குமாரர், சேலேத், அப்பாயிம் என்பவர்கள்; சேலேத் புத்திரரில்லாமல் மரித்தான்.
view More
1 நாளாகமம் 2:31
அப்பாயிமின் குமாரர் இஷி முதலானவர்கள்; இஷியின் குமாரர் சேசான் முதலானவர்கள்; சேசானின் குமாரத்தி அக்லாய்.
view More
1 நாளாகமம் 2:32
சம்மாயின் சகோதரனாகிய யாதாவின் குமாரர், யெத்தெர், யோனத்தான் என்பவர்கள்; யெத்தெர் குமாரரில்லாமல் மரித்தான்.
view More
1 நாளாகமம் 2:33
யோனத்தானின் குமாரர், பேலேத்சாசா என்பவர்கள்; இவர்கள் யெர்மெயேலின் புத்திரர்.
view More
1 நாளாகமம் 2:34
சேசானுக்குக் குமாரத்திகளேயன்றி குமாரர்கள் இல்லை; சேசானுக்கு யர்கா என்னும் பேருள்ள எகிப்திய வேலைக்காரன் ஒருவன் இருந்தான்.
view More
1 நாளாகமம் 2:35
சேசான் தன் குமாரத்தியைத் தன் வேலைக்காரனாகிய யாகாவுக்குக் கொடுத்தான்; அவள் அவனுக்கு அத்தாயியைப் பெற்றாள்.
view More
1 நாளாகமம் 2:36
அத்தாயி நாதானைப் பெற்றான். நாதான் சாபாதைப் பெற்றான்.
view More
1 நாளாகமம் 2:37
சாபாத் எப்லாலைப் பெற்றான்; எப்லால் ஒபேதைப் பெற்றான்.
view More
1 நாளாகமம் 2:38
ஓபேத் ஏகூவைப் பெற்றான்; ஏகூ அசரியாவைப் பெற்றான்.
view More
1 நாளாகமம் 2:39
அசரியா ஏலேத்சைப் பெற்றான்; ஏலேத்ஸ் எலெயாசாவைப் பெற்றான்.
view More
1 நாளாகமம் 2:40
எலெயாசா சிஸ்மாயைப் பெற்றான்; சிஸ்மாய் சல்லுூமைப் பெற்றான்.
view More
1 நாளாகமம் 2:41
சல்லுூம் எக்கமியாவைப் பெற்றான்; எக்கமியா எலிசாமாவைப் பெற்றான்.
view More
1 நாளாகமம் 2:42
யெர்மெயேலின் சகோதரனாகிய காலேபின் குமாரர், சீப்பின் தகப்பனாகிய மேசா என்னும் முதற்பிறந்தவனும் எப்ரோனின் தகப்பனாகிய மெரோசாவின் குமாரருமே.
view More
1 நாளாகமம் 2:43
எப்ரோனின் குமாரர், கோராகு, தப்புவா, ரெக்கேம் செமா என்பவர்கள்.
view More
1 நாளாகமம் 2:44
செமா யோர்க்கேயாமின் தகப்பனாகிய ரெக்கேமைப் பெற்றான்; ரெக்கேம் சம்மாயைப் பெற்றான்.
view More
1 நாளாகமம் 2:45
சம்மாயின் குமாரன் மாகோன்; மாகோன் பெத்சூரின் தகப்பன்.
view More
1 நாளாகமம் 2:46
காலேபின் மறுமனையாட்டியாகிய எப்பாள் ஆரானையும் மோசாவையும், காசேசையும் பெற்றாள்; ஆரான் காசேசைப் பெற்றான்.
view More
1 நாளாகமம் 2:47
யாதாயின் குமாரர், ரேகேம், யோதாம், கேசாம், பேலேத், எப்பா, சாகாப் என்பவர்கள்.
view More