மாடித்தோட்டத்தில் கறிவேப்பிலை பயிரிடும் முறை

 0  11
மாடித்தோட்டத்தில் கறிவேப்பிலை பயிரிடும் முறை

நாம் அனைவரும் அன்றாட காய்கறிகளை நமது வீட்டு மாடியில் பயிர் செய்யலாம். இவ்வாறு பயிர் செய்வதினால் நமக்கு உடல் நலத்தை காப்பதுடன் இயற்கை முறையில் விளைந்த காய்கறிகளை உண்ட திருப்தியும் ஏற்படும். எனவே நம்மால் முடிந்த அளவுக்கு மாடித்தோட்டங்களை ஏற்படுத்தலாம். மாடித்தோட்டத்தில் கறிவேப்பிலை பயிரிடும் முறை யை இங்கு காணலாம்.

தேவையான பொருட்கள்
  • Grow Bags அல்லது Thotti
  • அடியுரமாக இட மணல், தென்னை நார்க்கழிவு, மண்புழு உரம், செம்மண், பஞ்சகாவ்யா.
  • விதைகள், குழித்தட்டுகள்
  • பூவாளி தெளிப்பான்

தொட்டிகள்

இதற்கு தொட்டி அல்லது பைகளை எந்த வடிவமாக இருந்தாலும் பயன்படுத்தலாம். அடியுரமாக ஒரு பங்கு தென்னை நார்க்கழிவு , ஒரு பங்கு மணல், ஒரு பங்கு இயற்கை உரம் ஆகியவற்றை கொண்டு தொட்டியை நிரப்ப வேண்டும்.

தொட்டி அல்லது பைகளில் பாதியளவு வரை இவற்றை இட்டு நிரப்ப வேண்டும். தென்னை நார்க்கழிவு சேர்ப்பதால் மண் இறுகாமல் இலகுவாக இருக்கும்.

விதைத்தல்

குழிதட்டுகளில் தென்னை நார்க்கழிவு நிரப்பி அதில் ஒரு விதை வரை ஊன்ற வேண்டும். விதைத்தவுடன் நீர் தெளிக்க வேண்டும். தினமும் தண்ணீர் தெளிக்க வேண்டும்.

50 முதல் 60 வயதான நாற்றுகளை நடவு செய்ய வேண்டும். தொட்டியின் அளவைப் பொறுத்து ஒன்று முதல் இரண்டு நாற்றுகளை நடவு செய்யலாம்.

நீர் நிர்வாகம்

நாற்று நட்டவுடன் நீர் தெளிக்க வேண்டும். பின்னர் தினமும் காலை அல்லது மாலை வேளையில் தண்ணீர் தெளிக்க வேண்டும்.

தென்னை நார்க்கழிவு சேர்ப்பதால் ஈரப்பதத்தை பொறுத்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

உரங்கள்

காய்கறி கழிவுகள், டீத்தூள், முட்டை ஓடு ஆகியவற்றை மக்கச்செய்து உரமாக போடலாம்.

பஞ்சகாவ்யா 10 மில்லியை இரண்டு லிட்டர் தண்ணீரில் கலந்து வாரம் ஒரு முறை ஊற்ற வேண்டும்.

பாதுகாப்பு முறைகள்

இலைகளில் பூச்சி தாக்குதல் காணப்பட்டால் வேப்பந்தூளை தண்ணீரில் கலந்து ஊற்ற வேண்டும். இது சிறந்த பூச்சி விரட்டியாக செயல்படும்.

குத்துச்செடிகளாக வளர்ப்பதற்கு நுனிகளை கிள்ளி விட வேண்டும்.

வேப்பெண்ணை, வேப்பங்கொட்டை சாறு, வேப்பம் பிண்ணாக்கு சாறு கலந்து பயிர்களில் தெளித்தால் புழுக்கள் கட்டுப்படும்.

அறுவடை

தேவைப்படும் பொழுது இளந்தளிர்களை கிள்ளி எடுக்க வேண்டும். முற்றிய இலைகளை அவ்வப்போது நீக்கி கவாத்து செய்ய வேண்டும்.

பயன்கள்:
  • பித்தத்தை தனித்து உடல் சூட்டை ஆற்றும் தன்மை உடையது. அதோடு கருவேப்பிலை கீரை மனதுக்கு உற்சாகத்தை தரக்கூடியது.
  • குமட்டல், சீதபேதியால் உண்டான வயிற்று உளைச்சல், நாள்பட்ட காய்ச்சல் ஆகியவற்றை கருவேப்பிலை குணப்படுத்துகிறது. பித்த மிகுதியால் உண்டாகும் பைத்தியத்தை குணப்படுத்த கருவேப்பிலை உதவுகின்றது.
  • வாந்தி, நாக்கு ருசியற்று போகுதல், பசியற்ற நிலை, சளி ஆகியவற்றை கறிவேப்பிலை குணப்படுத்தும். கண்கள் ஒளி பெறவும், முடி நரைக்காமல் இருக்கவும், மேனி எழில் பெறவும் கறிவேப்பிலை உதவுகின்றது.
  • கறிவேப்பிலை சாறு ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை பலப்படுத்தும். பத்திய உணவு சாப்பிடுபவர்கள் கறிவேப்பிலை சேர்த்துக்கொள்வது நல்லது.
  • கறிவேப்பிலையை நன்கு அரைத்து அதனுடன் முட்டையின் வெள்ளை கருவை சேர்த்து தலைக்கு தேய்த்து குளித்தால் முடி நன்றாக வளரும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow