மாடித்தோட்டத்தில் காய்கறி வளர்க்கும் பைகளை ஆன்லைனில் வாங்கலாமா?

மாடித்தோட்டத்தில் காய்கறி வளர்க்கும் பைகளை ஆன்லைனில் வாங்கலாமா?

மாடித்தோட்டத்தில் காய்கறி வளர்க்கும் பைகளை ஆன்லைனில் வாங்கலாமா?

மாடித்தோட்டத்தில் காய்கறி வளர்க்கலாமா வேண்டாமா என்றே நிறைய பேருக்கு சந்தேகங்கள் தோன்றும். வாழை மா நெல்லிக்காய் போன்ற மரவகைகளையே வளர்க்கும் பொழுது காய்கறிகளை வளர்க்கலாம். அவற்றை வளர்க்க நாம் நிறைய செலவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நம்மிடம் இருக்கும் தொட்டி அல்லது பிளாஸ்டிக் பைகளில் வளர்க்கலாம். இல்லையெனில் ஆன்லைனில் வாங்கி பயன்படுத்தலாம்.

நாங்கள் இங்கே உங்களுக்கான பைகளையும் (Grow Bags) மாடித்தோட்டத்தில் செடி வளர்ப்போருக்கான சில டிப்ஸ் களையும் தெளிவாக குறிப்பிட்டுள்ளோம். படித்து பயன்பெறுங்கள். நோய் இல்லாமல் இயற்கை காய்கறி மற்றும் கீரைகளை உங்கள் வீட்டு மாடியில் வளர்த்து சாப்பிடுங்கள்.

துளசி தக்காளி கத்தரிக்காய்

துளசி தக்காளி கத்தரிக்காய் போன்ற செடிகளை வளர்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ள அளவுள்ள பைகள் போதுமானது.
ஆன்லைனில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள பட்டனை பயன்படுத்தி நேரடியாக பிளிப்கார்ட்டில் வாங்கலாம்.
நன்றாக உழைக்கும் தரமான பைகள் தான். நம்பி வாங்கலாம்.
ஐந்து பைகளின் விலை Rs 610
கொத்தமல்லி புதினா கீரை வகைகளுக்குகொத்தமல்லி புதினா கீரை வகைகளுக்கு அகலமான பைகள் தேவை. கீழே கொடுக்கப்பட்டுள்ள பைகள் நன்றாக உள்ளது.
5 பைகளில் வீட்டுக்கு தேவையான கீரை வகைகளை தாராளமாக பயிரிடலாம்
ஆன்லைனில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள பட்டனை பயன்படுத்தி நேரடியாக பிளிப்கார்ட்டில் வாங்கலாம்.
ஐந்து பைகளின் விலை Rs 810


கீரை வகைகளுக்கு

Evergreen Terrace gardening 24″x12″x12″ – (Pack of 2) Grow Bag


கேரட், பீட்ரூட், வளர்க்க
Evergreen Terrace gardening 12″x12″ (Set of 6) Grow Bagநமக்கு தேவையான காய்கறிகளை நமே வளர்த்து சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழ்வோம்.
மாடி தோட்டத்தில் கீரைகளை பயிரிடலாம். கீரைகள் ஆரோக்கியமான வாழ்வின் அங்கம் வகிக்கும் ஒரு ஊட்டச்சத்து.
– நவீன்

மாடித்தோட்டத்தில் செடி வளர்ப்போருக்கான சில டிப்ஸ்


நல்ல விளைச்சலை பெற வேண்டுமானால் முதலில் மண் ஆரோகியதுடன் இருக்க வேண்டும். செடிகள் தங்களுக்கு தேவையான சத்துக்களை மண்ணிலிருந்து மீதியை காற்றிலிருந்து பெற்று கொள்கிறது. அதனால் மண்ணும் சத்து நிறைந்ததாக இருக்க வேண்டும்.

நீங்கள் செடி வளர்க்க நினைக்கும் பையில், அல்லது நிலத்தில் ஒரு பங்கு மண், ஒரு பங்கு மணல், ஒரு பங்கு இயற்கை உரம் என இந்த மூன்றையும் கலந்து வைக்க வேண்டும்.

இந்த மண் கலவை தயரானதும் உடனே விதைக்க வேண்டாம். 7-10 நாட்கள் மண் காய்ந்து, நுண்ணுயிரிகள் வேலை செய்ய தொடங்கிவிடும். இதன் பிறகு விதைப்பு செய்யதால், நல்ல விளைச்சல் நிச்சயம்.

பஞ்சகவ்யா 50 மில்லி என்ற அளவில் ஒரு லிட்டர் நீரில் கரைத்து பையில் ஊற்ற வேண்டும்.

பூச்சி தாக்குதலை தவிர்க்க வாரம் ஒரு முறை வேம்பு பூச்சிவிரட்டியை 2 மில்லி என்ற அளவில் 1 லிட்டர் நீரில் கரைத்து மாலை வேளையில் செடிகளின் மேல் தெளிக்க வேண்டும்.

கோடை காலத்தில் இருமுறையும், குளிர் காலத்தில் ஒரு முறையும் ஒரு பைக்கு ஒரு லிட்டர் நீர் ஊற்ற வேண்டும். காலை அல்லது மாலை நேரத்தில் மட்டுமே பாசனம் செய்ய வேண்டும்.

டிப்ஸ் 1

பை, தொட்டியின் அடிப்புறம் நான்கு திசைகளிலும் அதிகப்படி நீர் வெளியேற துவாரங்கள் இட வேண்டும்.

டிப்ஸ் 2

கத்திரி, மிளகாய் மற்றும் தக்காளி பயிர்களை நாற்று விட்டு நடவு செய்ய வேண்டும்.

டிப்ஸ் 3

வெண்டை, முள்ளங்கி, செடி அவரை மற்றும் கீரை வகைகளை நேரடியாக விதைப்பு செய்ய வேண்டும்.

டிப்ஸ் 4

ஒவ்வொரு விதையும் விதைப்பதற்கு முன்பு சில வழிமுறைகளை பயன்படுத்தவேண்டும். வெண்டை விதையை வெள்ளை துணியில் கட்டி அரைமணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து எடுத்து அப்படியே மூன்று நாட்கள் வைத்துவிட்டால் முளை வந்துவிடும். அதைத்தான் தொட்டியில் நட வேண்டும். காலை நேரத்தில் விதைப்பது நல்லது.