மாடித்தோட்டத்தில் காசினிகீரை பயிரிடும் முறை

Oct 4, 2022 - 00:00
 0  36
மாடித்தோட்டத்தில் காசினிகீரை பயிரிடும் முறை

நாம் அனைவரும் அன்றாட காய்கறிகளை நமது வீட்டு மாடியில் பயிர் செய்யலாம். இவ்வாறு பயிர் செய்வதினால் நமக்கு உடல் நலத்தை காப்பதுடன் இயற்கை முறையில் விளைந்த காய்கறிகளை உண்ட திருப்தியும் ஏற்படும். எனவே நம்மால் முடிந்த அளவுக்கு மாடித்தோட்டங்களை ஏற்படுத்தலாம். மாடித்தோட்டத்தில் காசினிகீரை பயிரிடும் முறை யை இங்கு காணலாம்.

தேவையான பொருட்கள்
  • Grow Bags அல்லது Thotti
  • அடியுரமாக இட மணல், தென்னை நார்க்கழிவு, மண்புழு உரம், செம்மண், பஞ்சகாவ்யா, வேப்பந்தூள்.
  • குழிதட்டுகள்
  • பூவாளி தெளிப்பான்

தொட்டிகள்

தேர்வு செய்த தொட்டி அல்லது பைகளில் அடியுரமாக மண், இயற்கை உரம், தென்னை நார்க்கழிவு ஆகியவற்றை சம அளவு கொண்டு தொட்டியை நிரப்பி ஆற விட வேண்டும்.

பைகளில் உரங்களை நிரப்பும் பொழுது, ஒரு அடி ஆழத்திற்கு மேல் நிரப்ப வேண்டும்.

விதைத்தல்

குழித்தட்டில் தென்னை நார்க்கழிவுகளை நிரப்பி குழிக்கு ஒரு விதை வீதம் ஊன்ற வேண்டும். விதைத்தவுடன் பூவாளியால் நீர் தெளிக்க வேண்டும். பின் விதைகள் முளைக்கும் வரை செய்திதாள்களை கொண்டு மூட வேண்டும்.

15-20 நாட்கள் வயதுடைய நாற்றுகளை தொட்டியின் அளவைப் பொறுத்து குறிப்பிட்ட இடைவெளியில் ஊன்ற வேண்டும்.

நீர் நிர்வாகம்

நாற்றுகளை நட்டவுடன் பூவாளி கொண்டு நீர் தெளிக்க வேண்டும். பின்னர் தினமும் காலை அல்லது மாலை வேளையில் தண்ணீர் தெளிக்க வேண்டும்.

உரங்கள்

சமையலறைக் கழிவுகளை மக்கச்செய்து உரமாக போடலாம். வாரம் ஒருமுறை மண்ணை கிளறி விட்டு ஒரு கையளவு மண்புழு உரத்தை இடலாம்.

தண்ணீருடன் பஞ்சகாவ்யாவை கலந்து ஊற்ற வேண்டும்.

பாதுகாப்பு முறைகள்

இலைகளில் பூச்சி தாக்குதல் காணப்பட்டால் வேப்பந்தூளை தண்ணீரில் கலந்து ஊற்ற வேண்டும். இது சிறந்த பூச்சி விரட்டியாக செயல்படும்.

அறுவடை

இதன் வேர்கள் நன்கு முதிர்ச்சியடைந்த பின்பே அறுவடை செய்ய வேண்டும். பொதுவாக நடவு செய்த 90 முதல் 100 நாட்களில் அறுவடை செய்யலாம்.

பயன்கள்
  • காசினிக் கீரையில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து, மற்றும் வைட்டமின் ஏ,பி,சி ஆகிய சத்துக்கள் உள்ளன.
  • காசினிக் கீரையை பாசிப்பருப்புடன் சேர்த்து கூட்டு செய்து சாப்பிட்டால் உடலில் உள்ள தேவையற்ற நீரை நீக்குவதுடன் உடலை சீராக வைக்க உதவும்.
  • இந்தக் கீரையை நீரில் கொதிக்க வைத்து சூப் செய்து அருந்தி வந்தால் உடல் எடை குறையும்.
  • காசினிக் கீரையை நிழலில் உலர்த்தி பொடி செய்து, தினமும் காலை வேளையில் ஒரு டம்ளர் வெந்நீரில் 1 ஸ்பூன் அளவு கலந்து வெறும் வயிற்றில் அருந்தி வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும்.
  • காசினிக் கீரையை நன்கு அரைத்து புண்ணின் மேல் கனமாக பற்று போட்டு கட்டி வந்தால் வெகு விரைவில் புண்கள் ஆறிவிடும்.
  • காசினிக் கீரையை பாசிப்பருப்புடன் வேகவைத்து சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமடைந்து நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow