குலதெய்வம் - குலதெய்வத்துக்கு மீறிய சக்தி உலகில் எதுவும் இல்லை

குலத்தை காக்கும் தெய்வமே குலதெய்வம் குலதெய்வத்துக்கு மீறிய சக்தி உலகில் எதுவும் இல்லை

 0  379

வீட்டில் நடக்ககூடிய அசம்பாவித சம்பவங்கள் 
திருமணம் நடக்காமல் போவது குழந்தை பாக்கிய தடையை ஏற்படுத்துவது 
ஆண் வாரிசுகள் இல்லமல் போவது பெண் வாரிசுகள் இல்லமல் போவது கணவன் மனைவி பிரிவினை தந்தை மகன்( மகள்) பிரிவினை
சொத்து தகறாரு கோர்ட் கேஸ் வம்பு வழக்குகள்
திடீர் மரணங்கள் 
நிம்மதி இல்லாத வாழ்க்கை 
கடன் வாங்குதல் 
தொழில் நஷ்டங்கள் 
அனைத்திற்க்கும் காரணம் 
நமது கர்மா இயக்கமே 

நான் யாருக்கும் எந்த துரோகமும் செய்ததில்லை 
புழு பூச்சியை கூட துன்புத்தியது இல்லை நன்மைகள் பல செய்திருக்கிறேன் சதா சர்வ காலமும் தெய்வமே கதி என இருக்கிறேன் குலதெய்வ கோயிலுக்கு அவ்வபொழுது சென்றுக்கொண்டிருக்கிறேன் எனக்கு மட்டும் எதற்க்கு இத்தனை துன்பம் துயரம் நம்மில் பலருக்கும் இந்த கேள்வி இருக்கும் 

கர்மா என்பது மூன்று வகைபட்டது 
1,முன்னோர்கள் செய்த தவறுகள்
2, முன் ஜென்மத்தில் செய்த தவறுகள் 
3,தெரிந்தே செய்த தவறுகள் 
இதை 
சஞ்சீத கர்மா
பிரரார்த்த கர்மா
அகாமி கர்மா 
விதிளுக்கு தக்க தண்டனைகள் 

மண் சாபம்
பெண் சாபம்
பொன் சாபம்

தெரியாமல் செய்யக்கூடிய தவறுகளுக்கு மன்னிப்பு உண்டு குல தெய்வ வழிபாடுகள் மூலமாகவும் நமது முன்னோர்களுக்கு திதி தர்பணங்கள் தருவதாலும் அமாவாசை தினங்களில் இறந்து போன தாய் தந்தையருக்கு படையல் வைத்து வழிபடுவதாலும் குலதெய்வம் சாந்தியடைந்து மன்னித்து அருளாசிகளை வழங்குவார்கள் 

தெரிந்து செய்யும் தவறுகளுக்கு  மன்னிப்பு என்பது இல்லை  

தாய் தந்தை இறந்தால் அவர்களுக்கு உரிய வருஷாந்திர திதிகளை இறந்த திதியன்று நீர்நிலைகளில் தர்பணம் செய்து வாருங்கள் 
அமாவாசை திதியில் இறந்த ஆன்மாக்கள் நமது வீடு தேடி வருவார்கள் என்பது ஐதீகம் 
படையல் வைத்து வழிபட்டு காகத்துக்கு உணவு வழங்குங்கள் 

குலதெய்வ கோயிலுக்கு சென்று வழிபாடு செய்ய ஏற்ற நாட்கள்
நாள்: செவ்வாய்க்கிழமை
மாதம்: பௌர்ணமி
வருடம் : மஹாசிவராத்தி 

குலத்தை காக்கும் தெய்வமே குலதெய்வம் குலதெய்வத்துக்கு மீறிய சக்தி உலகில் எதுவும் இல்லை
குலதெய்வத்திடம் தஞ்சம் அடையுங்கள் வாழ்வில் சுபிக்ஷ்ம் பெறுங்கள்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow