இன்றைய நாள் பஞ்சாங்கமும் ராசிபலனும்-வெள்ளிக்கிழமை(03-06-2022)

இன்றைய நாள் பஞ்சாங்கமும் ராசிபலனும்-வெள்ளிக்கிழமை(03-06-2022)

இன்றைய நாள்  பஞ்சாங்கமும் ராசிபலனும்-வெள்ளிக்கிழமை(03-06-2022)

#இன்றையபஞ்சாங்கம்

சுபகிருது ஆண்டு 
வைகாசி 20 

1,#நாள் வெள்ளிக்கிழமை (03.06.2022)

2,#நட்சத்திரம் : புனர்பூசம் 07:05 PM வரை பிறகு பூசம்

3,#திதி : 02:42 AM வரை சதுர்த்தி பின்னர் பஞ்சமி

4,#யோகம் : சித்த - மரண யோகம்

5,#கரணம் : வணிசை காலை 11:53 வரை பின்பு பத்திரை

நல்லநேரம் : காலை 9.30 - 10.30 / 4.30 - 5.30

#வெள்ளிக்கிழமை 
சுபஹோரை விவரங்கள்
காலை 6 முதல் 9 வரை, பகல் 1 முதல் 1.30 வரை, 5 முதல் 6 வரை, இரவு 8 முதல் 9 வரை, 10.30 முதல் 11 வரை

சுபகாரியங்கள் : ஆபரணம் அணிய, தொழில் ஆரம்பம் செய்ய, சுபம் பேச சிறந்த நாள்

இன்று:சுபமுகூர்த்த நாள்
சதுர்த்தி விரதம்

நல்ல நேரம்
09:30 - 10:30 கா / AM
04:30 - 05:30 மா / PM
கௌரி நல்ல நேரம்
12:30 - 01:30 கா / AM
06:30 - 07:30 மா / PM

இராகு காலம்
10.30 - 12.00
எமகண்டம்
03.00 - 04.30
குளிகை
07.30 - 09.00

சூலம்:மேற்கு
பரிகாரம்- வெல்லம்

சந்திராஷ்டமம்
கேட்டை+ மூலம்

சம நோக்கு நாள்

#லக்னம்: ரிஷப லக்னம் இருப்பு நாழிகை 01 வினாடி 50

#சூரிய_உதயம்
Sun Rise 05:52 காலை / AM

#இன்றைய_ராசிபலன்

மேஷம்

மேஷ ராசி நேயர்களே, குடும்பத்தை பற்றிய கவலை இருக்கும். முக்கிய திட்டங்கள் நிறைவேறும். கோர்ட் வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களே, குடும்பத்தில் சிக்கனத்தை கடைபிடிக்கவும். ஆன்மிக நாட்டம் கூடும். தேக ஆரோக்கியம் பலம் பெரும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்

மிதுனம்

மிதுன ராசி நேயர்களே, குடும்ப நிதி நிலைமை சீரடையும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உறவினர்களுடன் சில விரிசல்கள் வரக்கூடும். உத்யோகத்தில் திருப்தி நிலை உண்டாகும்.

கடகம்

கடக ராசி நேயர்களே, மனதிற்கு இதமான செய்தி ஒன்று வரும். தான, தர்ம காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். இல்வாழ்வில் இனிமை கூடும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

சிம்மம்

சிம்ம ராசி நேயர்களே, அடுத்தவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கவும். உங்கள் வாழ்க்கை தரம் உயரும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.

கன்னி

கன்னி ராசி நேயர்களே, குடும்ப சலசலப்புகள் மறையும். உங்களால் சுற்றி இருப்பவர்கள் பயனடைவர். அடுத்தவர் பேச்சுக்கு இடம் தர வேண்டாம். உத்யோகத்தில் அமைதி நிலவும்.

துலாம்

துலாம் ராசி நேயர்களே, புது முயற்சிகளை சற்று தள்ளி வைக்கவும். மனதில் இருந்து வந்த அலைச்சல், டென்ஷன், கோபம் யாவும் நீங்கும். பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். உத்யோகத்தில் பாராட்டு மழை உண்டு.

விருச்சிகம்

விருச்சிக ராசி நேயர்களே, குடும்பத்தில் கூச்சல், குழப்பம் நீங்கும். பொருள் சேர்க்கைக்கு இடமுண்டு. வேண்டாதவர்களின் உண்மையான சுயரூபம் புரியவரும். தொழில், வியாபாரத்தில் சில தடை இருக்கும்.

தனுசு

தனுசு ராசி நேயர்களே, பயணங்களால் உடல் அலைச்சல் அதிகரிக்கும். வாக்கு சாதுர்யம் ஏற்படும். உடன்பிறப்புகள் ஆதரவாக செயல்படுவர். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும் ராசிக்கு சந்திராஷ்டமம்
இருப்பதால் புதிய முயற்ச்சிகளில் ஈடுபட வேண்டாம் 

மகரம்

மகர ராசி நேயர்களே, யாரையும் நம்பி உறுதி மொழி தரவேண்டாம். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வெளி உணவுகளை தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

கும்பம்

கும்ப ராசி நேயர்களே, குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் கோபத்தை தூண்டலாம். மனதில் நினைத்த காரியம் நிறைவேறும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவர். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

மீனம்

மீன ராசி நேயர்களே, குடும்பத்தில் ஸ்வாரஸ்யம் அதிகமாகும். சொந்த பந்தங்கள் மத்தியில் மதிப்பு உயரும். அடுத்தவர்களின் கருத்துக்கு செவி சாய்க்க வேண்டாம். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.