விவசாயிகளின் நிலங்களை இலவசமாக உழவு செய்து தரும் திட்டம்

Aug 4, 2022 - 00:00
 0  533
விவசாயிகளின் நிலங்களை இலவசமாக உழவு செய்து தரும் திட்டம்

தமிழக அரசு மற்றும் TAFE நிறுவனத்தின் மூலம் சிறு குறு விவசாயிகளின் நிலங்களை அதாவது ஒன்று அல்லது இரண்டு ஏக்கர் நிலம் வைத்துள்ள விவசாயிகளின் நிலங்களை இலவசமாக உழவு செய்து தரும் திட்டம் ஒன்றினை தமிழக அரசு மற்றும் TAFE நிறுவனம் இணைந்து செயல்பாட்டுக்கு கொண்டுவந்து உள்ளது

உலகம் முழுவதும் தற்பொழுது கொரானோ வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டு உள்ளது. அதனால் அத்தியாவசிய தேவைகள் அதிகரித்து உள்ளது . மேலும் அதிகரிக்காமல் இருப்பதற்கு தமிழக அரசு வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த பணிகளுக்கு மட்டும் ஊரடங்கு உத்தரவிலிருந்து விலக்கு அளித்துள்ளது.

விவசாயம் சார்ந்த பணிகளுக்கு மட்டும் ஊரடங்கில் இருந்து விலக்கு அளித்ததாலும் வேளாண்மை சார்ந்த பணிகள் நடந்தால் தான் அனைவருக்கும் போதிய உணவை தர முடியும் என்றதால் மத்திய அரசும் விவசாய பணிகளுக்கு அனுமதி அளித்தது.

கோடை உழவுக்கு தயாராகும் விவசாயிகள் :

விவசாயிகள் பெரும் பாலும் பங்குனி – சித்திரை மாதங்களில் கோடை உழவு தொடங்குவார்கள். இந்நிலையில் அவர்களுக்கு டிராக்டர் மற்றும் இதர விவசாய கருவிகள் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது.

200 வகையான காய்கறிகள், பழங்கள், கீரைகள், மாடித்தோட்டம் பற்றிய தகவலை ஒரே இடத்தில அறிய விரும்பும் நண்பர்கள் இந்த லிங்கில் சென்று படிக்கவும். 200 காய்கறிகள், பழங்கள், கீரைகள், மாடிதோட்ட குறிப்புகள் அறிய கிளிக் செய்யவும்

கை கொடுக்கும் TAFE டிராக்டர் நிறுவனம் :

கொரானோ வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு இருப்பதினால், விவசாயிகள் எந்த ஒரு பணிகளும் மேற்கொள்ளமால் இருப்பதினால், கோடை உழவினை மேற்கொள்ள முடியாமல் இருக்கும் சிறு குறு விவசாயிகளின் பயன் பெறும் வகையில் அவர்களுக்கு 4,400 டிராக்டர்கள் மற்றும் 10,500 விவசாய கருவிகளை விவசாயிகளுக்கு தந்து உதவ TAFE நிறுவனம் முன்வந்துள்ளது.

தமிழக வேளாண் துறையுடன் TAFE புதிய திட்டம் :

தமிழக வேளாண் துறையுடன் இணைந்து TAFE டிராக்டர் நிறுவனம் விவசாயிகளுக்கு பயன் பெறும் வகையில் இலவச உழவு பணியினை செய்து வருகிறது.

தமிழ்நாட்டில், இந்த மூன்று மாதங்களில்( ஏப்ரல்-ஜூன் ) சிறுகுறு விவசாயிகள் பயன்பெறுமாறு TAFE நிறுவனம் 4,400 டிராக்டர்கள் மற்றும் 10,500 விவசாய கருவிகளை இலவச வாடகை முறையில் வழங்குகிறது . இந்த சலுகை 30 மாவட்டங்களில் கிடைக்கும் என TAFE நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த திட்டம் ஏப்ரல் 1 ம் தேதி முதல் நடைமுறையில் உள்ளது

முதன் முதலில் விருதுநகர் மாவட்டத்தில் தொடக்கம்:

இந்த இலவச உழவு திட்டத்தினை விருதுநகர் மாவட்டத்தில் உள்ள துலுக்கன்குளம், மாந்தோப்பு, அச்சன் குளம், அழகிய நல்லூர் , பிசிண்டி ஆகிய பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் இலவச உழவு பணியினை தொடங்கப்பட்டு உள்ளது.

எப்படி பெறுவது

ஜேபார்ம் (J FARM) என்ற செயலியை பதிவிறக்கம் செய்து அதில் உங்களின் தகவல்களை பதிவு செய்து உழவு சேவையை பயன் பெறலாம்.

ஸ்மாட்போன் இல்லாத விவசாயிகள் 1800 4200 100 என்ற தொலைபேசி எண்ணில் TAFE நிறுவனத்தை தொடர்பு கொள்ளலாம்.

தமிழகம் முழுவதும் இத்திட்டம் இருப்பதாலும் சிறு மற்றும் குறு விவசாயிகள் பயன் பெறும் வகையில் இந்த இலவச உழவு பணியினை செய்து வருகிறோம். விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் இந்த மாத இறுதிக்குள் 1500 ஏக்கர் நிலங்களை உழவு செய்ய நிர்ணயித்து உள்ளோம் ஜுன் 30ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் விவசாய பெருமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என TAFE நிறுவனம் தரப்பிலும் தமிழ் நாடு வேளாண்மை அலுவலகம் தரப்பிலும் கூறப்பட்டுள்ளது.

முழு விடியோவை இங்கு காணலாம்

மாடித்தோட்டத்தில் காய்கறிகள், பழங்கள், கீரைகள், பயிரிட விரும்பும் நண்பர்கள் இந்த லிங்கில் சென்று படியுங்கள் மாடித்தோட்ட விவசாயம் பற்றி அறிய கிளிக் செய்யவும்


நமது பேஸ்புக் குழுவில் இணைந்து உங்கள் விவசாய சந்தேகங்களை கேட்க விரும்பும் நண்பர்கள் கீழுள்ள லிங்கில் இணையவும் FACEBOOK குரூப்பில் இணைய கிளிக் செய்யவும்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow