வீட்டில் எந்த இடத்தில் விளக்கேற்றினால் என்ன பலன் என பார்ப்போம்.

வீட்டில் தீபம் ஏற்றும் முறை .

Sep 13, 2021 - 13:27
 0  26
வீட்டில் எந்த இடத்தில் விளக்கேற்றினால் என்ன பலன் என பார்ப்போம்.

விளக்கு ஏற்றுதல் என்பது பண்டைய காலம் தொட்டு பின்பற்றி வரும் ஒரு முறையாகும். கோவில் முதல் வீடு வரை அனைத்து இடங்களிலும் நாம் இருளை நீக்கி ஒளியை பெற வெளிக்கேற்றுவதுண்டு. விளக்கின் ஒளி இருளை மட்டும் தான் நீக்குகிறதா என்றால் இல்லை. அதோடு சேர்த்து நமக்கு இறை அருளையும் பெற்று தரும் வல்லமை விளக்கின் ஒளிக்கும் உண்டு. அந்த வகையில் நமது வீட்டின் முன் வாசல் முதல் பின் வாசல் வரை எந்த இடத்தில் விளக்கேற்றினால் என்ன பலன்கள் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

1. வாசல்: நமது வீட்டின் வாசலில் சாணம் தெளித்து கோலமிட்டு அந்த கோலத்தின் நடுவில் தினமும் விளக்கேற்றி வந்தோம் என்றால் அந்த வாசல் விளக்கின் ஒளி   தெய்வ சக்தியை ஈர்த்து நமது வீட்டிற்குள் நுழைய செய்யும்.

2. நிலைப்படி: இன்றைய காலத்தில் அப்பார்ட்மென்டில் குடியிருப்பவர்களுக்கு வாசல் இல்லாமல் இருக்கலாம். ஆனால் நிச்சயம் நிலைப்படி இருக்கும். இந்த       நிலைப்படிக்கு இரண்டு பக்கமும் விளக்கேற்றி வந்தோம் என்றால் அந்த வீட்டில் தெய்வ சக்தி நிலைத்திருக்கும்.

3. சமையலறை: வீட்டில் வாழும் அனைவரது ஆரோக்கியத்திற்கும் முக்கிய காரணமாக இருப்பது நாம் உண்ணும் உணவு. அந்த வகையில் சமயலறையில்   விளக்கேற்றுவதன் மூலம் நமது வீட்டில் என்றும் உணவு பஞ்சம் ஏற்படாமல் இருக்கும்.

4. பின் வாசல்: நகர்ப்புறங்களில் வாழும் பலரது வீடுகளில் பின் வாசல் என்பது இருப்பதில்லை. ஆனால் கிராமப்புறங்களில் வாழ்பவர்களின் வீடுகளில் பின் வாசலை   அதிகம் காணலாம். இந்த பின் வாசலில் விளக்கேற்றுவதன் மூலம் அந்த வீட்டில் வசிப்பவர்கள் அனைவரின் ஆயுளும் கூடும்.

5. மாடு கட்டும் இடம்: இதுவும் கிராமப்புறங்களில் வசிப்போர்களுக்கு தான் பொருந்தும். ஏன் என்றால் அங்கு தான் மாட்டு தொழுவம் இருக்கும். மாட்டு தொழுவத்தில் விளக்கேற்றுவதன் மூலம் குல தெய்வத்தின் அருளையும், சகல தேவர்களின் அருளையும் ஒரு சேர பெற முடியும்.

7. பூஜை அறை: ஒருவேளை மேலே கூறப்பட்டுள்ள எந்த இடங்களிலும் விளக்கேற்ற முடியவில்லை என்றாலும் பூஜை அறையில் நிச்சயம் விளக்கேற்ற வேண்டும்.   பூஜை அறையில் விளக்கேற்றுவதன் மூலம் மற்ற இடங்களில் விளக்கேற்றியதன் பலனை பெற முடியும்.

சிலர், வீட்டின் மற்ற இடங்களில் தினமும் விளக்கேற்றுவார்கள், சிலர் வாரம் இருமுறை ஏற்றுவார்கள். ஒரு சிலரால் வாரம் ஒரு முறை கூட ஏற்ற இயலாது. அப்படி இருக்கையில் நிச்சயம் வருடம் ஒரு முறையாவது கார்த்திகை தீபத்தன்று வீட்டின் அனைத்து இடங்களிலும் விளக்கேற்றி இறை அருளை பெறலாம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow