இன்றைய நாள் பஞ்சாங்கமும் ராசிபலனும்-வியாழகிழமை(30-12-2021)

இன்றைய நாள் பஞ்சாங்கமும் ராசிபலனும்-வியாழகிழமை(30-12-2021)

இன்றைய நாள்  பஞ்சாங்கமும் ராசிபலனும்-வியாழகிழமை(30-12-2021)

இன்றைய பஞ்சாங்கம்

Date : #வியாழன், 30 டிசம்பர் 2021

சூரிய உதயம் : 06:34
சூரிய அஸ்தமனம் : 17:49

சந்திர உதயாதி நாழிகை: 27:39
சந்திர அஸ்தமனம்: 14:33

ஷகா சம்வத் : 1943 பிலவ

Lunar Month : மார்கழி 15

பட்சம் : கிருஷ்ண பக்ஷம்

திதி : ஏகாதசி - 13:40 வரை

நட்சத்திரத்தன்று : விசாகம் -  24:34 வரை

யோகம்: திருதி - 21:50 வரை

முதல் கர்ணன் : பாலவம் - 13:40 வரை
இரண்டாவது கர்ணன் : கௌலவம் -  24:13 வரை

சூரிய அடையாளம் : தனுசு
சந்திரன் அடையாளம் :துலாம் - 19:08 வரை

அபிஜித் : 11:49 - 12:34

துர்முஹுர்த்தம்: 10:19 - 11:04
14:49 - 15:34

அமிர்தகாலம்: 16:32 - 18:00

Varjyam : 07:46 - 09:13
28:09 - 29:35

ராகுகாலம்: 13:36 - 15:00

குலிகை : 09:23 - 10:47

யமகண்டம் : 06:34 - 07:59

#சந்திராஷ்டமம்
ரேவதி=70%
அஸ்வினி=30%

இன்றைய ராசிபலன்கள்

மேஷம்

மேஷம்: தன் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். மனைவிவழியில்  ஒத்துழைப்பு அதிகரிக்கும். விலை உயர்ந்த ஆபரணங்களை வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். எதிர்பாராத நன்மை கிட்டும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: கனிவாகப்பேசி காரியம் சாதிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர், நண்பர் களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். வெற்றி பெறும் நாள்.

மிதுனம்

மிதுனம்: புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் நல்ல செய்தி கேட்பீர்கள். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். கனவு நனவாகும் நாள்.

கடகம்

கடகம்:  எதிர்ப்புகள் அடங்கும். தாய்வழி உறவினர்கள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப் பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார் கள். தடைகளை தாண்டி வெல்லும் நாள்.

சிம்மம்

சிம்மம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். உறவினர்கள் பாராட்டும்படி நடந்துகொள்வீர்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்தும் தருவார்கள். மாறுபட்ட அணுகுமுறையால் முன்னேறும் நாள்.

கன்னி

கன்னி: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். அழகும் இளமையும் கூடும். வெளிவட்டாரத் தில் புது அனுபவம் உண்டாகும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு கிட்டும் .  உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.  மனசாட்சிபடி செயல்படும் நாள்.

துலாம்

துலாம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். பணியில் அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணதாமதமாக வரும். உத்தியோகத்தில் அதிருப்தி உண்டாகும். கவனம் தேவைப்படும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: கணவன்-மனைவிக் குள் அனுசரித்துப் போவது நல்லது. திடீர்  பயணங்கள் மற்றும் செலவுகளால் திணறுவீர்கள். உறவினர்களால் மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப்பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து செல்லும். போராடி வெல்லும் நாள்.

தனுசு

தனுசு: ஆன்மிகப்  பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் ஆதரவு பெருகும். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப் படுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள்.  உத்தியோகத்தில் உங்களின் புதிய முயற்சிகள் பலிதமாகும். லாபம் பெரும் நாள்.

மகரம்

மகரம்: சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். உறவினர் நண்பர் களால் அனுகூலம் உண்டு. நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். நன்மை நடக்கும் நாள்.

கும்பம்

கும்பம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். புதிய நட்பால் உற்சாகமடைவீர்கள். புண்ணிய ஸ்தலம் சென்று வருவீர்கள். வியாபா ரத்தில் நெளிவு சுளிவுகளை கற்றுக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதிய மாற்றம் ஏற்படும் நாள்.

மீனம்

மீனம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசிய செலவுகள் அதிகமாகும்.யாரையும் யாருக்கும் நீங்கள் சிபாரிசு செய்ய வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு. கவனம் தேவைப்படும் நாள்.