இன்றைய நாள் எப்பிடி-வெள்ளிக்கிழமை(27-03-2020)

இன்றைய நாள் எப்பிடி-வெள்ளிக்கிழமை(27-03-2020)

Mar 26, 2020 - 20:46
 0  221
இன்றைய நாள் எப்பிடி-வெள்ளிக்கிழமை(27-03-2020)

#இன்றையபஞ்சாங்கம்

27-மார்ச்-2020
சூரியோதயம்    : 6:22 am சந்திரௌதயம்   : 08:13 am
சூரியாஸ்தமனம் : 6:27 pm சந்திராஸ்தமனம் : 08:54 pm
சூரியன்ராசி   : மீனம்
சந்திரன்ராசி  :   மேஷம்
மாதம்    : பங்குனி 14"ம் நாள்    பக்ஷம்    : சுக்ல பக்ஷம்

#பஞ்சாங்கம்

1️⃣,வாரம்    : வெள்ளி

2️⃣ திதி     : திருதியை இறுதி 10:12 pm சதுர்த்தி

3️⃣,நட்சத்திரம் : அசுவினி இறுதி 10:09 am பரணி

4️⃣,யோகம்    : திருதி இறுதி 05:15 pm விஷ்கம்பம்

5️⃣,கரணம்    :சைதுளை 09:04 am
கரசை 10:12 pm
வனசை 10:12 pm

#நல்ல_நேரம்    

அபிஜித்       : 12:00 pm – 12:49 pm

அமிர்த காலம்     : 02:04 am – 03:52 am

ஆனந்ததி யோகம் : 10:09 am Mudgar

☻#கெட்ட_நேரம்☻ 

ராகுகாலம்   : 11:10 am – 12:27 pm

யம கண்டம் : 3:00 pm – 4:17 pm

தியாஜ்யம்   : 05:39 am – 07:26 am

குளிகன்      : 8:36 am – 9:53 am

#துர்முஹுர்த்தம் 

 1. 09:22 am – 10:03 am 
2. 12:47 pm – 01:28 pm

#அமிர்தயோகம் காலை 10.09 வரை பின்பு #சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. அம்மன் வழிபாடு நல்லது.

#சுப_ஹோரைகள் 
காலை 06.00-08.00, காலை10.00-10.30. 
மதியம் 01.00-03.00,  
மாலை 05.00-06.00,  
இரவு 08.00-10.00

#சந்திராஷ்டமம்
#சித்திரை

இன்றைய ராசிபலன்கள்

#மேஷம் 
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் மன உறுதியோடு பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி வரும். குடும்பத்தில் பெரியவர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். தொழிலில் வெளியூர் தொடர்புகள் மூலம் அனுகூலப் பலன்கள் இருக்கும். லாபம் பெருகும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும்.

# ரிஷபம் 
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடித்து வெற்றி பெறுவீர்கள். ஒரு சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு. உங்களின் பிரச்சினைகள் குறைய உறவினர்கள் உதவியாக இருப்பர். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் அமைதி நிலவும். 

#மிதுனம் 
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு உறவினர்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சினைகள் உண்டாகும். கூட்டாளிகளின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பெரிய மனிதர்களின் நட்பு நல்ல மாற்றத்தை தரும். கணவன் மனைவி இடையே சிறு சிறு சண்டை, சச்சரவுகள் தோன்றி மறையும்.

#கடகம் 
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் உடல் ரீதியாக பலவீனமாக காணப்படுவீர்கள். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உருவாகலாம். தொழில் வியாபாரத்தில் பணியாட்களால் மனசங்கடங்கள் உண்டாகும். உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். கடன்கள் குறையும். தெய்வ வழிபாட்டின் மூலம் நன்மை பெறலாம். பிள்ளைகளால் உள்ளம் மகிழும். 

#சிம்மம் 
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாளில் உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமான நிலை ஏற்படும். குடும்பத்துடன் செலவிடக் கூடிய வாய்ப்புகள் அமையும். கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். சுபகாரியங்கள் தள்ளி செல்லும். பழைய கடன்கள் தீரும். குடும்பத்தில் அமைதி நிலவும். உறவுகளில் விரிசல் ஏற்படாமல் இருக்க அமைதியாக இருப்பது நல்லது. 

#கன்னி 
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகள் படிப்பில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். வேலையில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். கொடுத்த கடன்கள் வசூலாகும். சகோதர, சகோதரிகளால் அனுகூலம் கிட்டும். மன தைரியத்துடன் காணப்படுவீர்கள்.

#துலாம்
 துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாகும். கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனம் தேவை. வெளியூர் பயணங்களை தவிர்ப்பது உத்தமம். பணியில் கவனம் தேவை. குடும்பத்தில் ஒற்றுமை நிலவ அனுசரித்து செல்வது நல்லது. 

#விருச்சிகம் 
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நண்பர்கள் மூலம் சுப செய்திகள் வந்து சேரும். புதிய பொருட் சேர்க்கை மகிழ்ச்சியினை தரும். பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும். சுபகாரிய முயற்சியில் கால தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் பெருகும். 

#தனுசு 
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு திடீர் பணவரவு உண்டாகும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். உடன்பிறந்தவர்கள் அனுகூலமாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியம் சீராகும். உத்தியோக ரீதியான பிரச்சனைகள் வளர்ந்து பின்னர் தானாகவே சரியாகி விடும். ஆடம்பர பொருட்களால் வீண் விரயங்கள் உண்டாகலாம். 

#மகரம்
 மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் தொட்ட காரியம் அனைத்தும் வெற்றியில் முடியும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமான புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். உத்தியோகத்தில் எதிரிகளின் தொல்லைகள் நீங்கும். சிலருக்கு வாகனத்தால் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படலாம். எச்சரிக்கை தேவை. 

#கும்பம் 
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாளில் குடும்பத்தில் பெரியவர்களின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். எதிலும் பொறுமையுடன் இருப்பது நல்லது. மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது உத்தமம். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் ஓரளவு குறையும். கணவன் மனைவி இடையே புரிதல் ஏற்படும். 

#மீனம் 
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். உறவினர்கள் மூலம் உங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். கணவன் மனைவியிடையே இருந்த மனஸ்தாபங்கள் விலகி ஒற்றுமையும் மகிழ்ச்சியும் கூடும். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் மேலோங்கி காணப்படும். ஒரு சிலருக்கு சேமிப்பு குறைவதில் மன இறுக்கம் ஏற்படலாம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow