இன்றைய நாள் எப்பிடி-சனிக்கிழமை(20-11-2021)

இன்றைய நாள் எப்பிடி-சனிக்கிழமை(20-11-2021)

இன்றைய நாள் எப்பிடி-சனிக்கிழமை(20-11-2021)

இன்றைய பஞ்சாங்கம்

Date : சனிக்கிழமை, 20 நவம்பர் 2021

சூரிய உதயம் : 06:14
சூரிய அஸ்தமனம் : 17:35

சந்திர உதயாதி நாழிகை : 18:25
சந்திர அஸ்தமனம்: 06:46

ஷகா சம்வத் : 1943 பிலவ

Lunar Month : கார்த்திகை 4

பட்சம் : கிருஷ்ண பக்ஷம்

திதி : பிரதமை - 17:04 வரை

நட்சத்திரத்தன்று : ரோகிணி - முழு இரவு வரை

யோகம் : சிவம் -  28:51 வரை

முதல் கர்ணன் : கௌலவம் - 17:04 வரை
இரண்டாவது கர்ணன் : சைதுளை - முழு இரவு வரை

சூரிய அடையாளம் :விருச்சிகம்
சந்திரன் அடையாளம் :ரிஷபம்

அபிஜித் : 11:32 - 12:17

துர்முஹுர்த்தம்: 06:14 - 06:59
06:59 - 07:44

அமிர்தகாலம் : 27:59 - 29:48

Varjyam : 22:34 - 24:22

ராகுகாலம் : 09:04 - 10:29

குளிகை : 06:14 - 07:39

யமகண்டம் : 13:20 - 14:45

#சந்திராஷ்டமம்
விசாகம் 

இன்றைய ராசிபலன்

மேஷம்

மேஷம்: குடும்பத்தில் நல்ல மகிழ்ச்சியான சூழல் நிலவும். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு எளிதில் தீர்வு கிடைக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். மனசாட்சிப்படி செயல்படும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் செலவுகளை குறைக்க முடியாமல் திணறுவீர்கள். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். சிலர் உங்களை பற்றி குறை கூறினாலும் அதைப் பெரிதாக்க வேண்டாம். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.

மிதுனம்

மிதுனம்: திட்டமிட்ட காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். உறவினர் நண்பர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். வாகனத்தில் கவனம் தேவை. உணர்ச்சிவசப்பட்டுப் பேசாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னை வந்து நீங்கும். உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

கடகம்

கடகம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். நெடுநாட்களாக பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். புது முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். புகழ் கௌரவம் உயரும் நாள்.

சிம்மம்

சிம்மம்: மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவுக் கிடைக்கும். சாதிக்கும் நாள்.

கன்னி

கன்னி: இதுவரை இருந்த அலைச்சல், டென்ஷன் அனைத்தும் குறையும். குடும்பத்தில் நிம்மதி யான சூழல் உருவாகும். பாதியில் நின்ற வேலைகள் முடியும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புதிய பாதை தெரியும் நாள்.

துலாம்

துலாம்: சந்திராஷ்டமம் இருப்பதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னைப் புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். யாரையும் நம்பி உறுதிமொழி தர வேண்டாம். வியாபாரத்தில் இழப்பு கள் ஏற்படும். உத்தியோகத்தில் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். நாவடக்கம் தேவைப்படும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

தனுசு

தனுசு: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். அதிகார பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் சில புதுமைகளை செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். அமோகமான நாள்.

மகரம்

மகரம்: புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம் குறித்து யோசிப்பீர்கள். ஆடம்பர செலவுகள் குறைத்து சேமிக்கதொடங்குவீர்கள்.  வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். நினைத்தது நிறைவேறும் நாள்.

கும்பம்

கும்பம்: அரசு காரியங்கள் சாதமாக முடியும். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். பழைய கடனை தீர்க்க புதிய வழியை யோசிப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகை மூலம் லாபம் அடைவீர்கள். உத்தியோகத்தில் சில சூட்சமங்களை கற்றுக் கொள்வீர்கள்.  எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

மீனம்

மீனம்: சொத்து பிரச்னைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள்.  வெற்றிக்கு வித்திடும் நாள்.