இன்றைய நாள் எப்பிடி-செவ்வாய்க்கிழமை(26-05-2020)

இன்றைய ராசி பலன்கள்,இன்றைய பஞ்சாங்கம்,astrology,சோதிடம்,ஜோதிடம்,என் ஜோதிடம்,rasi palan ,today rasipalan,ராசிபலன்,jothidam,மேஷம்,ரிஷபம்,மிதுனம்,கடகம்,சிம்மம்,கன்னி,துலாம்,விருச்சிகம்,தனுசு,மகரம்,கும்பம்,மீனம்,அதிர்ஷ்ட திசை ,அதிர்ஷ்ட எண் ,அதிர்ஷ்ட நிறம்

May 25, 2020 - 21:10
 0  116
இன்றைய நாள் எப்பிடி-செவ்வாய்க்கிழமை(26-05-2020)

இன்றைய பஞ்சாங்கம்

மே 26

பஞ்சாங்கம் ~ வைகாசி . ~13(26.05.2020) *செவ்வாய்க்கிழமை.
வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ உத்தராயணம் * ருது ~ வசந்த ருதௌ மாதம்~வைகாசி ( ரிஷப மாஸம்)
*பக்ஷம் ~ சுக்ல பக்ஷம் *
*திதி~ சதுர்த்தி அதிகாலை 00.42 வரை பிறகு பஞ்சமி.
*ஸ்ரார்த்த திதி ~ சதுர்த்தி.

நாள் ~ செவ்வாய்க்கிழமை (பௌம வாஸரம்) நக்ஷத்திரம்: திருவாதிரை (ஆர்த்ரா) அதிகாலை 06.24 வரை பிறகு புனர்பூசம் (புனர்வஸூ). *யோகம்~ மரண யோகம் காலை 06.24 வரை பிறகு சித்த யோகம்.
*நல்ல நேரம் ~ 07.30 ~ 08.30 AM 04.30~ 05.30 PM .
ராகு காலம்~ மாலை 03.00~04.30
எமகண்டம்~ காலை 09.00~10.30
குளிகை ~ மாலை 12.00 ~ 01.30.
சூரிய உதயம்~ காலை 05.56 AM.
சூரிய அஸ்தமனuம்~ மாலை 06.25 PM.
*குறிப்பு : சூர்ய உதயம், அஸ்தமனம் இடத்திற்கு இடம் மாறும். *சந்திராஷ்டமம்~ கேட்டை.
சூலம்~ வடக்கு.

இன்றைய ராசிபலன்கள் 26.05.2020
மேஷம்

நீண்ட நாட்களாக எதிர்பார்த்த சுபகாரியங்கள் கைகூடும். தொழில் சம்பந்தமான வெளியூர் தொடர்புகள் சாதகமான முடிவுகளை அளிக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவு மனநிம்மதியை அளிக்கும். கலைஞர்களுக்கு தனது திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

அஸ்வினி : சுபகாரியங்கள் கைகூடும்.

பரணி : நிம்மதியான நாள்.

கிருத்திகை : வாய்ப்புகள் ஏற்படும்.

ரிஷபம்

புதுவிதமான பயணங்கள் வாழ்க்கையில் மாற்றங்களை உண்டாகும். நெருக்கமானவர்களின் உதவிகளால் மேன்மையான சூழல் அமையும். எதிர்காலம் தொடர்பான புதிய லட்சிய கனவுகளை உருவாக்குவீர்கள். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

கிருத்திகை : மாற்றங்கள் உண்டாகும்.

ரோகிணி : மேன்மையான நாள்.

மிருகசீரிஷம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

மிதுனம்

குடும்பத்தில் கலகலப்பான தருணங்கள் உண்டாகும். வியாபாரம் தொடர்பான புதிய திட்டங்கள் மற்றும் அபிவிருத்திக்கான கடனுதவிகள் சாதகமாக அமையும். மனதிற்குப் பிடித்த இடத்திற்கு சென்று வருவீர்கள். வாழ்க்கை துணைவரிடம் மனம் விட்டு பேசுவதால் கவலைகள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மிருகசீரிஷம் : கலகலப்பான நாள்.

திருவாதிரை : அபிவிருத்தி உண்டாகும்.

புனர்பூசம் : கவலைகள் குறையும்.

கடகம்

கூட்டுத்தொழிலில் சிறு மாறுதல்கள் இலாபத்தை அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் மனதிற்கு மகிழ்ச்சியையும், புதிய நம்பிக்கையையும் உண்டாக்கும். கடன் சம்பந்தமான கவலைகள் குறையும். திட்டமிட்ட பயணங்களில் சில காலதாமதம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்

புனர்பூசம் : இலாபம் மேம்படும்.

பூசம் : நம்பிக்கை அதிகரிக்கும்.

ஆயில்யம் : கவலைகள் குறையும்.

சிம்மம்

மனதில் புதுவிதமான எண்ணங்கள் மற்றும் கனவுகள் உண்டாகும். கடன்களை குறைப்பதற்கான செயல்பாடுகள் அதிகரிக்கும். எதிர்பாராத இடமாற்றம் மூலம் மாற்றமான சூழல் உண்டாகும். பெரியோர்களிடம் நிதானத்துடன் செயல்படவும். எதிர்பார்த்த சுபச்செய்திகள் காலதாமதமாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மகம் : எண்ணங்கள் மேலோங்கும்.

பூரம் : செயல்பாடுகள் அதிகரிக்கும்.

உத்திரம் : நிதானத்துடன் செயல்படவும்.

கன்னி

புதிய தொழில் வாய்ப்புகள் உண்டாகும். பிள்ளைகளின் கல்வி பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். கூட்டுத்தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்துவந்த எதிர்ப்புகள் குறையும். உறவினர்களின் மூலம் சாதகமான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

உத்திரம் : வாய்ப்புகள் உண்டாகும்.

அஸ்தம் : இலாபம் கிடைக்கும்.

சித்திரை : எதிர்ப்புகள் குறையும்.

துலாம்

உத்தியோகஸ்தர்களுக்கு சாதகமான இடமாற்றம் உண்டாகும். நெருக்கமானவர்களிடம் வீண் விவாதங்களை தவிர்ப்பது நன்று. நிலுவையில் உள்ள தனவரவுகள் கிடைப்பதற்கான சூழல் அமையும். நண்பர்களுடன் கேளிக்கைகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

சித்திரை : இடமாற்றம் உண்டாகும்.

சுவாதி : வாதங்களை தவிர்க்கவும்.

விசாகம் : மகிழ்ச்சியான நாள்.

விருச்சகம்

உடன் பணிபுரிபவர்களிடம் நிதானமாக செயல்படவும். பேச்சுக்களில் கனிவு வேண்டும். எதிர்பாராத செயல்களால் நெருக்கடியான சூழல் உண்டாகும். கொடுக்கல்-வாங்கலில் கவனத்துடன் இருக்கவும். மனதிற்கு நெருக்கமானவர்களிடம் அனுசரித்து செல்லவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

விசாகம் : நிதானமாக செயல்படவும்.

அனுஷம் : நெருக்கடியான நாள்.

கேட்டை : அனுசரித்து செல்லவும்.

தனுசு

சொத்து சம்பந்தமான விவகாரங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். பொருளாதார மேம்பாட்டிற்கான முயற்சிகள் மேம்படும். எதிர்பாராத சுபச்செய்திகளின் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படும். தாய்வழி உறவுகளால் சாதகமான பலன்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மூலம் : சாதகமான நாள்.

பூராடம் : முயற்சிகள் மேம்படும்.

உத்திராடம் : மகிழ்ச்சி உண்டாகும்.

மகரம்

திட்டமிட்ட செயல்களை முழுவேகத்துடன் செயல்படுத்துவீர்கள். பிள்ளைகளின் மூலம் ஆதாயமான சூழல் உண்டாகும். அவ்வப்போது பழைய நினைவுகள் மனதில் தோன்றி மறையும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

உத்திராடம் : வேகம் அதிகரிக்கும்.

திருவோணம் : ஆதாயமான நாள்.

அவிட்டம் : புரிதல் உண்டாகும்.

கும்பம்

மனதில் இருந்துவந்த பலவிதமான எண்ணங்களிலிருந்து தெளிவு கிடைக்கும். தொழில் சம்பந்தமான செயல்பாடுகளில் புதிய முடிவுகள் உண்டாகும். புதுவிதமான இலக்குகளை நிர்ணயிப்பீர்கள். நண்பர்கள், உறவினர்களின் மூலம் சாதகமான சூழல் அமையும். புத்திரர்களின் மூலம் சுபச்செய்திகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

அவிட்டம் : தெளிவு கிடைக்கும்.

சதயம் : இலக்குகள் உண்டாகும்.

பூரட்டாதி : சுபமான நாள்.

மீனம்

செய்யும் செயல்களால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். குடும்ப நபர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். சொத்து வாங்குவது பற்றிய எண்ணங்கள் மேலோங்கும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

பூரட்டாதி : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.

உத்திரட்டாதி : எண்ணங்கள் மேலோங்கும்.

ரேவதி : இன்னல்கள் குறையும்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow