இன்றைய நாள் எப்பிடி-திங்கட்கிழமை(16-03-2020)
இன்றைய நாள் எப்பிடி-திங்கட்கிழமை(16-03-2020)
இன்றையபஞ்சாங்கம்
16-மார்ச்-2020
சூரியோதயம் : 6:29 am சந்திரௌதயம் : 12:14 am
சூரியாஸ்தமனம் : 6:26 pm சந்திராஸ்தமனம் : 12:50 pm
சூரியன்ராசி : மீனம்
சந்திரன்ராசி : தனு
மாதம் : பங்குனி 3️⃣"ம் நாள்
பக்ஷம் : கிருஷ்ண பக்ஷம்
#பஞ்சாங்கம்
1️⃣வாரம் : திங்கள்
2️⃣திதி : அஷ்டமி இறுதி 03:00 am
3️⃣நட்சத்திரம் : ஆனி இறுதி 11:12 am மூலம்
4️⃣யோகம் : சித்தி இறுதி 01:32 pm வியாதிபாதம்
5️⃣கரணம் :பாலவம் 03:04 pm
கௌலவம் 03:00 am
#நல்ல_நேரம்
அபிஜித் : 12:04 pm – 12:52 pm
அமிர்த காலம் : 02:27 am – 04:03 am
ஆனந்ததி யோகம் : 11:12 am Lumbaka
☻#கெட்ட_நேரம்☻
ராகுகாலம் : 8:35 am – 9:51 am
யம கண்டம் : 11:08 am – 12:25 pm
தியாஜ்யம் : None
குளிகன் : 1:41 pm – 2:58 pm
#துர்முஹுர்த்தம்
1. 12:45 pm – 01:26 pm
2. 02:48 pm – 03:29 pm
#நாள்_முழுவதும்
#சித்தயோகம்.
நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. கால பைரவர் வழிபாடு நல்லது. சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.
#சுப_ஹோரைகள் மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00,
மாலை06.00 -08.00,
இரவு 10.00-11.00.
#சந்திராஷடமம்
#பரணி
#கார்த்திகை
#இன்றைய_ராசிப்பலன்
#மேஷம்
இன்று உங்கள் ராசிக்கு பகல் 11.12 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மனதில் குழப்பம், தேவையற்ற கவலை உண்டாகும். உத்தயோகத்தில் வீண் சிக்கல்களை சந்திக்க நேரிடும். கொடுக்கல் வாங்கல் சம்பந்தமான பிரச்சினைகளில் மதியத்திற்கு பிறகு மன அமைதி கிட்டும்.
#ரிஷபம்
இன்று நீங்கள் எந்த விஷயத்திலும் கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். உங்கள் ராசிக்கு பகல் 11.12 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் பேச்சிலும் செயலிலும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். தொழில் வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது.
#மிதுனம்
இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக இருந்த பிரச்சினைகள் குறைந்து மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகளால் பெருமை வந்து சேரும். பூர்வீக சொத்து விஷயமாக அலைச்சல் அதிகரித்தாலும் அதற்கேற்ற பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும்.
#கடகம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். புத்திர வழியில் செலவுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் அலைச்சலுக்குப் பின் அனுகூலம் கிட்டும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். வியாபாரத்தில் புதிய நபரின் அறிமுகத்தால் நன்மை ஏற்படும். நினைத்த காரியம் நிறைவேறும்.
#சிம்மம்
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். எதிர்பாராத செலவுகளை சமாளிக்க கடன் வாங்கும் நிலை ஏற்படும். சிக்கனமாக செயல்பட்டால் குடும்பத்தில் உள்ள நெருக்கடிகள் குறையும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். பூர்வீக சொத்துக்கள் வழியில் லாபம் கிடைக்கும்.
#கன்னி
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழச்சிகள் நடைபெறும். பெண்கள் நவீன பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் குறையும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு திறமைகேற்ப வாய்ப்புகள் அமையும்.
#துலாம்
இன்று குடும்பத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் உண்டாகும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபம் கிடைப்பதில் சில தடைகள் ஏற்படலாம். எதையும் யோசித்து செய்வது நல்லது. உத்தியோக ரீதியாக வெளிவட்டார நட்பு ஏற்படும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.
#விருச்சிகம்
இன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சற்று பாதிப்புகள் ஏற்படலாம். ஆடம்பர பொருட்களால் செலவுகள் அதிகமாகும். சேமிப்பு குறையும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு இருக்கும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும்.
#தனுசு
இன்று குடும்பத்தினருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை நிலவும். உற்றார் உறவினர்களால் அனுகூலங்கள் உண்டாகும். சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை விலகி லாபகரமான பலன்களை அடைவீர்கள்.
#மகரம்
இன்று எந்த செயலையும் செய்து முடிப்பதற்கு சில இடையூறுகள் ஏற்படலாம். உடன் பிறந்தவர்களால் வீண் பிரச்சினைகள் வரலாம். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். நண்பர்களின் ஒத்துழைப்பால் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எதிலும் நிதானம் தேவை.
#கும்பம்
இன்று உங்களுக்கு தாராள தனவரவு உண்டாகும். உத்தியோகத்தில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். தொழிலில் இதுவரை எதிரியாக இருந்தவர் கூட நண்பராக மாறி செயல்படுவர். பிள்ளைகளுக்கு படிப்பில் ஈடுபாடு உண்டாகும். இல்லத்தில் சுபகாரியங்கள் கைகூடும்.
#மீனம்
இன்று நீங்கள் சற்று சோர்வுடனும் சுறுசுறுப்பின்றியும் காணப்படுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை அளிக்கும். உடன் பிறந்தவர்களால் அனுகூலம் கிட்டும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் லாபம் கிட்டும்.
ஓம் நமச்சிவாய:
What's Your Reaction?