இன்றைய நாள் எப்பிடி-புதன்கிழமை(15-12-2021)

இன்றைய நாள் எப்பிடி-புதன்கிழமை(15-12-2021)

 0  19
இன்றைய நாள் எப்பிடி-புதன்கிழமை(15-12-2021)

இன்றைய பஞ்சாங்கம்

Date : #புதன்கிழமை, 15 டிசம்பர் 2021

சூரிய உதயம் : 06:27
சூரிய அஸ்தமனம் : 17:41

சந்திர உதயாதி நாழிகை : 15:01
சந்திர அஸ்தமனம்: 27:53

ஷகா சம்வத் : 1943 பிலவ

Lunar Month : கார்த்திகை 29

பட்சம் : சுக்ல பக்ஷம்

திதி : துவாதசி -  26:01 வரை

நட்சத்திரத்தன்று : பரணி - முழு இரவு வரை

யோகம் : பரிகம் - 06:30 வரை

முதல் கர்ணன் : பவம் - 12:46 வரை
இரண்டாவது கர்ணன் : பாலவம் -  26:01 வரை

சூரிய அடையாளம் : விருச்சிகம் -  27:58 வரை
சந்திரன் அடையாளம் : மேஷம்

அபிஜித் : இன்று இல்லை

துர்முஹுர்த்தம் : 11:42 - 12:27

அமிர்தகாலம் : 26:12 - 28:00

Varjyam : 15:26 - 17:14

ராகுகாலம் : 12:04 - 13:28

குளிகை : 10:40 - 12:04

யமகண்டம் : 07:51 - 09:16

#சந்திராஷ்டமம்
ஹஸ்தம்

இன்றைய ராசிபலன்

மேஷம்

மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால்  செலவுகளை குறைக்க முடியாமல் திணறுவீர்கள். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். சிலர் உங்களை குறை கூறினாலும் அதைப்
பெரிதாக்க வேண்டாம். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.

ரிஷபம்

ரிஷபம்: திட்டமிட்ட காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். உறவினர் நண்பர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். வாகனத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்சினைகள் வந்து நீங்கும். உத்தியோகத்தில் மேலதிகாரியிடம் மோதல்கள் வேண்டாமே. தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

மிதுனம்

மிதுனம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன் பிறந்தவர்கள் உங்கள் நலனில்  அதிக அக்கறை காட்டுவார்கள். நீண்ட நாட்களாக  பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். புது முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகள் ஏற்பீர்கள். புகழ் கௌரவம் கூடும் நாள்.

கடகம்

கடகம்: மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். சாதிக்கும் நாள்.

சிம்மம்

சிம்மம்: இதுவரை இருந்த அலைச்சல் டென்ஷன் குறைந்து மனதில் மகிழ்ச்சியாக இருக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. பாதியில் நின்ற வேலைகள் முடியும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புதிய பாதை தெரியும் நாள்.

கன்னி

கன்னி: சந்திராஷ்டமம் இருப்பதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள்.  குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னைப் புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். யாரையும் நம்பி உறுதிமொழி தர வேண்டாம். வியாபாரத்தில் பெரிய  இழப்புக்கள் ஏற்படக்கூடும், எச்சரிக்கை தேவை. உத்தியோகத்தில் யாரையும்  பகைத்துக் கொள்ளாதீர்கள். நாவடக்கம் தேவைப்படும் நாள்.

துலாம்

துலாம்: சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதர வகையில் நன்மை கள் உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள்.  உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். அமோகமான நாள்.

தனுசு

தனுசு: புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகளின் உயர்கல்வி உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்க தொடங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். நினைத்தது நிறைவேறும் நாள்.

மகரம்

மகரம்: அரசு காரியங்கள் சாதகமாக முடியும். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் சில சூழ்ச்சிகளை முறியடித்து,நலிவு,சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

கும்பம்

கும்பம்: சொத்து பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும்.  உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு சில ஆலோசனையை தருவீர்கள். வெற்றியைத் தரும் நாள்.

மீனம்

மீனம்: குடும்பத்தில் இதுவரை வந்த பிரச்சினைகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும் . கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் உண்டு. நீண்ட நாளாக  இருந்து வந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். மனசாட்சிபடி செயல்படும் நாள்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow