திருக்குறள் - குறள் 648
குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: அமைச்சியல். அதிகாரம்: சொல்வன்மை.

திருக்குறள் - குறள் 648
விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின்.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
வகைப்படுத்தியும், சுவையாகவும் கருத்துக்களைச் சொல்லும் வல்லமையுடையோர் சுட்டிக்காட்டும் பணியை, உலகத்தார் உடனடியாக நிறைவேற்ற முனைவார்கள்.
மு.வரதராசனார் உரை:
கருத்துக்களை ஒழுங்காகக் கோர்த்து இனியாக சொல்ல வல்லவரைப் பெற்றால், உலகம் விரைந்து அவருடைய ஏவலைக் கேட்டு நடக்கும்.
சாலமன் பாப்பையா உரை:
சொல்லும் செய்திகளை வரிசைபடக் கோத்து இனிதாகச் சொல்லும் ஆற்றலை உடையவர் என்றால், அவர் சொல்வனவற்றை உலகம் விரைந்து ஏற்றுக் கொள்ளும்.
பரிமேலழகர் உரை:
தொழில் நிரந்து இனிது சொல்லுதல் வல்லார்ப்பெறின் - சொல்லப்படும் காரியங்களை நிரல்படக் கோத்து இனிதாகச் சொல்லுதல் வல்லாரைப் பெறின்; ஞாலம் விரைந்து கேட்கும் - உலகம் அவற்றை விரைந்து ஏற்றுக்கொள்ளும். (தொழில் - சாதியொருமை. நிரல்படக் கோத்தல் - முன் சொல்வனவும் பின்
மணக்குடவர் உரை:
இனிதாகச் சொல்ல வல்லாரைப் பெற்றாராயின் உலகத்தார் மேவி விரைந்து சென்று செய்யுந் தொழில் யாது என்று கேட்பர். இது சொற்களைச் சொல்லின் இனிதாகச் சொல்லவேண்டு மென்றது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
சொல்லப்படுபவற்றை ஒழுங்காகவும் முறையாகவும் இனிதாகவும் சொல்லுகின்ற வல்லவரைப் பெற்றுவிட்டால், உலகம் அவற்றை விரைந்து ஏற்றுக் கொள்ளும்.
Translation:
Swiftly the listening world will gather round,
When men of mighty speech the weighty theme propound.
Explanation:
If there be those who can speak on various subjects in their proper order and in a pleasing manner, the world would readily accept them.

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்