Skip to content

Popular

திருக்குறள் - குறள் 562

குறள் பால்:
பொருட்பால்
குறள் இயல்:
அரசியல்
குறள் 562
கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்
நீங்காமை வேண்டு பவர்.
— திருவள்ளுவர் · வெருவந்தசெய்யாமை
WhatsApp

திருக்குறள் - குறள் 562 உரை

கலைஞர் மு.கருணாநிதி உரை

குற்றங்கள் நிகழாமல் இருக்கக் கண்டிக்கும்போது கடுமை காட்டித், தண்டிக்கும் போது மென்மை காட்டுகிறவர்களின் செல்வாக்குதான் தொய்வின்றி நெடுநாள் நீடிக்கும்.

மு.வரதராசனார் உரை

ஆக்கம் நெடுங்காலம் நீங்காமலிருக்க விரும்புகின்றவர் (தண்டிக்கத் தொடங்கும் போது) அளவு கடந்து செய்வது போல் காட்டி அளவு மீறாமல் முறை செய்ய வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை

நெடுங்காலம் ஆட்சி செய்ய விரும்புபவர் தண்டிக்கும்போது கடுமையாகத் தண்டிப்பவர்போல தொடங்கி வரம்பு கடவாமல் செய்க.

பரிமேலழகர் உரை

கடிது ஒச்சி - அவ்வொத்தாங்கு ஒறுத்தல் தொடங்குங்கால் அளவிறப்பச் செய்வார்போல் தொடங்கி, மெல்ல எறிக - செய்யுங்கால் அளவிறவாமல் செய்க, ஆக்கம் நெடிது நீங்காமை வேண்டுபவர் - ஆக்கம் தம்கண் நெடுங்காலம் நிற்றலை வேண்டுவார்.
(கடிது ஓச்சல், குற்றஞ் செய்வார் அதனை அஞ்சுதற் பொருட்டும், மெல்ல எறிதல் யாவரும் வெருவாமைப் பொருட்டுமாம். தொடங்கின அளவில் குறைதல் பற்றி மென்மை கூறப்பட்டது. 'ஓச்சுதல்', 'எறிதல்' என்பன இரண்டும் உவமைபற்றி வந்தன. இவை இரண்டு பாட்டானும் குடிகள் வெருவந்த செய்யாமைய

மணக்குடவர் உரை

கடிதாகச் செய்வாரைப் போன்று மெல்லிதாகச் செய்க, நெடிதாக வருகின்ற ஆக்கம் நீங்காமையை வேண்டுவார். இது குற்றத்திற்குத் தக்க தண்டத்தைக் குறையச் செய்யவேண்டு மென்றது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை

செல்வம் தன்னைவிட்டு நெடுங்காலம் நீங்காமல் நிற்பதை வேண்டுபவர்கள் தண்டிக்கும்போது அளவு கடந்து செய்வது போலத் தொடக்கி, செய்யும்போது அளவுகடவாமல் செய்தல் வேண்டும்.

Translation

For length of days with still increasing joys on Heav'n who call,
Should raise the rod with brow severe, but let it gently fall.

Explanation

Let the king, who desires that his prosperity may long remain, commence his preliminary enquires with strictness, and then punish with mildness.

திருக்குறள் - குறள் 562
திருக்குறள் ஓவியம் - குறள் 562
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this kural.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

அதிகாரம் 57: வெருவந்தசெய்யாமை