திருக்குறள் - குறள் 210
குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: தீவினையச்சம்.
திருக்குறள் - குறள் 210
அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின்.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
வழிதவறிச் சென்று பிறர்க்குத் தீங்கு விளைவிக்காதவர்க்கு எந்தக் கேடும் ஏற்படாது என்பதை அறிந்து கொள்க.
மு.வரதராசனார் உரை:
ஒருவன் தவறான நெறியில் சென்று தீயசெயல் செய்யாதிருப்பானானால் அவன் கேடு இல்லாதவன் என்று அறியலாம்.
சாலமன் பாப்பையா உரை:
தீய வழிகளில் பிறர்க்குத் தீமை செய்யாது வாழ்பவனே கேடு இல்லாதவன் என்று அறிக.
பரிமேலழகர் உரை:
மருங்கு ஓடித் தீவினை செய்யான் எனின் - ஒருவன் செந்நெறிக் கண் செல்லாது கொடுநெறிக்கண் சென்று பிறர்மாட்டுத் தீவினைகளைச் செய்யானாயின், அருங்கேடன் என்பது அறிக - அவன் அரிதாகிய கேட்டையுடையவன் என்பது அறிக. (அருமை: இன்மை.. அருங்கேடன் என்பதனை, 'சென்று சேக்கல்லாப் பு
மணக்குடவர் உரை:
ஒருமருங்கு ஓடிப் பிறர்க்குத்தீவினைகளைச் செய்யானாயின் தனக்குக் கேடுவருவதில்லை யென்று தானே யறிக. இது கேடில்லை யென்றது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
ஒருவன் கொடுமையான வழியிலே சென்று தீச் செயல்களைப் பிறருக்குச் செய்யாதிருப்பானானால் அவன் கெடுதி இல்லாதவன் என்பதனை அறிந்துகொள்ளுதல் வேண்டும்.
Translation:
The man, to devious way of sin that never turned aside,
From ruin rests secure, whatever ills betide.
Explanation:
Know ye that he is freed from destruction who commits no evil, going to neither side of the right path.
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்