Skip to content

Popular

திருக்குறள் - குறள் 201

குறள் பால்:
அறத்துப்பால்
குறள் இயல்:
இல்லறவியல்
அதிகாரம்:
தீவினையச்சம்
குறள் 201
தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை என்னும் செருக்கு.
— திருவள்ளுவர் · தீவினையச்சம்
WhatsApp

திருக்குறள் - குறள் 201 உரை

கலைஞர் மு.கருணாநிதி உரை

தீயவர்கள் தீவினை செய்ய அஞ்சமாட்டார்கள்; தீவினையால் மகிழ்ச்சி ஏற்படுவதாயினும் அதனைச் செய்திடச் சான்றோர் அஞ்சி நடுங்குவார்கள்.

மு.வரதராசனார் உரை

தீயவை செய்தலாகிய செருக்கைத் தீவினை உடைய பாவிகள் அஞ்சார், தீவினை இல்லாத மேலோர் மட்டுமே அஞ்சுவர்.

சாலமன் பாப்பையா உரை

தீமை என்னும் மயக்கத்தைச் செய்ய, முன்னைத் தீவினை உடையவர் பயப்படமாட்டார்; பெரியவர்களோ பயப்படுவர்.

பரிமேலழகர் உரை

[அஃதாவது, பாவங்களாயின செய்தற்கு அஞ்சுதல். இதனான் மெய்யின்கண் நிகழும் பாவங்கள் எல்லாம் தொகுத்து விளக்குகின்றார் ஆகலின்.இது பயன்இல சொல்லாமையின்பின் வைக்கப்பட்டது.)
தீவினை என்னும் செருக்கு - தீவினை என்று சொல்லப்படும் மயக்கத்தை, தீவினையார் அஞ்சார் - முன் செய்த தீவினையுடையார் அஞ்சார், விழுமியார் அஞ்சுவர் - அஃது இலராகிய சீரியார் அஞ்சுவர். ('தீவினை என்னும் செருக்கு' எனக் காரியம் காரணமாக உபசரிக்கப்பட்டது. மேல் தொட்டுச் செ

மணக்குடவர் உரை

என்றுந் தீத்தொழில் செய்வா ரஞ்சார்: சீரியரஞ்சுவர், தீவினையாகிய களிப்பை. இஃது இதற்கு நல்லோ ரஞ்சுவ ரென்றது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை

தீய செயல் என்னும் செருக்குடைய அறியாமைக்கு தீவினையாளராகிய தீச்செயல் நெஞ்சங்கொண்டவர்கள் அஞ்சமாட்டார்கள். சீரிய சிறப்புடையவர்கள் அஞ்சப் படுவார்கள்.

Translation

With sinful act men cease to feel the dread of ill within,
The excellent will dread the wanton pride of cherished sin.

Explanation

Those who have experience of evil deeds will not fear, but the excellent will fear the pride of sin.

திருக்குறள் - குறள் 201
திருக்குறள் ஓவியம் - குறள் 201
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this kural.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

அதிகாரம் 21: தீவினையச்சம்